சமாதானத்துக்கான பயணப்பாதைகள் –
உள்வாங்கும் ஆட்சி மற்றும் சமூக
ஒத்திசைவைக் கட்டியெழுப்பல்
சமாதானத்துக்கான பயணப்பாதைகள் –
உள்வாங்கும் ஆட்சி மற்றும் சமூக
ஒத்திசைவைக் கட்டியெழுப்பல்

சமாதானத்துக்கான பயணப்பாதைகள் - இலங்கையில் இன, மத மற்றும் மொழிச் சமூகங்களிலும், குறிப்பாக பெண்கள் மற்றும் பெண்பிள்ளைகளுக்கிடையிலும் சமாதானத்தையும் ஒற்றுமையையும் வலுப்படுத்துவதை நோக்கமாக்கொண்டுள்ள

அனைவரையும் உள்ளடக்கிய, அனைவருக்கும் சமத்துவமான மற்றும் பொறுப்புணர்வுடன் கூடிய அரச சேவைகளை வழங்குவதற்கும், மற்றும் மொழி உரிமைகள், பால்நிலை கூர்வுணர்வுமிக்க சேவைகள் மற்றும் சமூக ஒத்திசைவு ஆகிய துறைகளில் நாட்டின் முதலாவது பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு [WPS) தேசிய செயற்திட்டத்தை (NAP) நடைமுறைப்படுத்துவதற்கும் இலங்கை அரசாங்கத்திற்கு தேவையான ஆதரவினையும் ஒத்துழைப்புக்களையும் வழங்குவதனூடாக இந்த நோக்கம் அடைந்துகொள்ளப்படும். சமாதானத்துக்கான பயணப்பாதைகள் செயற்திட்டமானது பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய ஆட்சி, சமூக சகவாழ்வினை ஊக்குவிப்பதற்கும் ஆதரவளிப்பதற்கும் பெண் உரிமைகள் நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களுக்கு தேவையான ஒத்துழைப்புக்களை நல்கும்

எமது பிரதான செயற்திட்டத் தூண்கள்

உள்வாங்கும் ஆட்சி

அனைவரையும் உள்ளடக்கிய, அனைவருக்கும் சமமான மற்றும் பொறுப்புணர்வுடன் கூடிய அரச சேவை வழங்கலை மேம்படுத்துதல்

பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு

முரண்பாடு, பலவீனம் மற்றும் பாதுகாப்பின்மை ஆகியவற்றுக்கு முகங்கொடுக்கும் விதத்தில் பெண்களின் தலைமைத்துவம் மற்றும் பங்கேற்பினை அதிகரித்தல்.

வலுவூட்டப்பட்ட சனசமூகங்கள்

அனைவரையும் உள்ளடக்கிய, அனைவருக்கும் சமமான மற்றும் பொறுப்புணர்வுடன் கூடிய அரச சேவைகளை கோரிப்பெறும் விதத்தில் சமூகங்களைப் பலப்படுத்துதல்.

IFF நிதி
உள்வாங்கலுக்கான எதிர்கால நிதி

சமாதானத்துக்கான பயணப்பாதைகள் இலங்கையில் அனைவரையும் உள்வாங்கும் ஆட்சி மற்றும் சமூக ஒத்திசைவைக் கட்டியெழுப்புவதற்காக, இலங்கையில் தொழிற்படுகின்ற சிவில் சமூக அமைப்புக்களிடமிருந்து (CSOs) எண்ணக்கருக் குறிப்புக்களைக் கோருகின்றது. பெண்கள், பெண் பிள்ளைகள், LGBTQI+ நபர்கள் (ஓரினபாலீர்ப்பு பெண்கள். ஓரினபாலீர்ப்பு ஆண்கள், இருபால் உறவாளர்கள், மாற்றுப் பாலினத்தவர்கள், பால்புதுமையர்கள், இடையிலிறுத்தவர்கள், ஏனையோர்) ஆகியோருக்கு விஷேடமான கவனக் குவிப்புடன் பெண்கள், பெண் பிள்ளைகள் LGBTQI+ நபர்கள், இனம், மதம் மற்றும் மொழிரீதியான சிறுபான்மையினர். இயலாமையுடையவர்கள் ஆகிய சகலரையும் உள்வாங்கும், சமத்துவமான மற்றும் பொறுப்புக்கூறத்தக்க பொதுச் சேவைகளை கோரும் விதத்தில் சிவில் சமூகக் குழுக்கள் மற்றும் தனிப்பட்ட நபர்களை வலுவூட்டுவதே IFF நிதியின் நோக்கமாகும்.

பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு நிதி
(Women, Peace and Security Fund - WPSF)

சமாதானத்துக்கான பயணப்பாதைகள் செயற்திட்டமானது, இலங்கையின் பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு தேசிய செயற்திட்டத்தினை அமுல்படுத்துவதற்கு ஆதரவளிக்கக் கூடிய செயற்திட்டக் குறிப்புகளைச் சமர்ப்பிப்பதற்கு பெண்கள் உரிமைகள்சார் அமைப்புகளுக்கு (WROs) அழைப்பு விடுக்கிறது.

alinea

மாறும் உலகிற்கான புதிய சிந்தனைகள்

சமாதானத்துக்கான பயணப்பாதைகள் செயற்திட்டம் கனடா அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அலீனியா இன்டர்நஷனல் நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அலீனியா, ஒரு சர்வதேச அபிவிருத்தி ஆலோசனை நிறுவனமாகும். அலீனியா என்பது “புதிய சிந்தனைகள்” எனும் தொனிப்பொருளாகும். எமது உள்ளக துறைசார் நிபுணர்கள் குழு உலகில் மாற்றமடையும் சவால்களை எதிர்கொள்வதற்கான மூலோபாயத் தீர்வுகளை எவ்வாறு திட்டமிட்டு, விருத்திசெய்து அவற்றை மிகவும் வினைத்திறனுடன் முன்வைக்கின்றனர் என்பதை பிரதிபலிக்கும்.

ஐக்கிய நாடுகளின் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளுடன் இணங்கியொழுகல்

பால்நிலை சமத்துவம்

ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்தல்

சமாதானம், நீதி மற்றும் வலுவான நிறுவனங்கள்