உள்வாங்குகை மற்றும் பாதுகாப்பான நியாயப்பிரசாரத்தினை மேம்படுத்தல்

உபதலைப்பு - IFF பங்காளர்களுக்கான புடீயூ மற்றும் பாதுகாப்பான நியாயப்பிரசாரம் குறித்த பயிலமர்வினை சமாதானத்துக்கான பயணப்பாதைகள் நிறுவனம் நடத்தியது.

சமாதானத்துக்கான பயணப்பாதைகள் நிறுவனம் தனது IFF பங்காளர்களுக்காக புடீயூ மற்றும் பாதுகாப்பான நியாயப்பிரசாரம் (ளுயகந யுனஎழஉயஉல) குறித்த ஒரு பயிலமர்வினை நடத்தியது. ஜனவரி 27 மற்றும் 28 ஆகிய திகதிகளில் நடைபெற்ற இம் மும்மொழிப் பயிலமர்வு, பால்நிலைஅடிப்படையிலான பகுப்பாய்வு (புடீயூ), பாதுகாப்பான நியாயப்பிரசாரம், மொழி உரிமைகள் மற்றும் மனித உரிமை அடிப்படையிலான அணுகுமுறை (ர்சுடீயு) ஆகிய தலைப்புகளில் திட்டமிடப்பட்டுள்ள பயிலமர்வுகளின் தொடரில் முதலாவதாக அமைந்தது.

இரண்டாம் நாள் பயிலமர்வானது, பால்நிலை மற்றும் பால்நிலை சமத்துவம் குறித்த அடிப்படை கருத்துகளை மீள்பார்வை செய்யும் கலந்துரையாடல்அமர்வுடன் தொடங்கியது. புடீயூ குறித்த பிரதான அமர்வு, திலினி டி அல்விஸ் (பால்நிலை சமத்துவம் மற்றும் சமூக உள்வாங்குகைக்கான முகாமையாளர் – யவாறயலள வழ நயஉந) அவர்களால் நடாத்தப்பட்டு, வி. வீரசிங்கம்(ஆலோசகர் – பால்நிலை நிபுணர்) அவர்களால் இணை வழிநடத்தப்பட்டது. புடீயூ என்பது துலங்கல் மற்றும் உள்வாங்குகை மிக்க தலையீடுகளை உருவாக்க உதவும் ஒரு பகுப்பாய்வு கருவியாகும்.

கனடாவில், புடீயு டரள ஆனதுவினைத்திறன் மிக்க கொள்கைகள், திட்டங்கள் மற்றும் சட்டங்களை உருவாக்க உதவும் முக்கிய கூறாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 1995 ஆம் ஆண்டு முதல் பால்நிலை சமத்துவத்திற்கான கனடாவின் அர்ப்பணிப்பின் பகுதியொன்றாக இருக்கும் புடீயு டரள, கனேடிய அரசின் தீர்மானமெடுத்தல் செயன்முறைகளில் ஒருங்கிணைந்த கூறாக பரிணாமமடைந்துள்ளது. புடீயு டரள பயன்பாடு என்பது, அபிவிருத்தி செயற்பாடுகளில் பால்நிலை மற்றும் பன்மைத்துவ கூருணர்திறனுடைய அணுகுமுறையினைக் கையாள்வதனை உள்ளடக்குகின்றது. வழி சமைக்கின்றது.இது குறித்த அபிவிருத்தி முன்னெடுப்பினூடாகக் கையாளப்படவுள்ள பிரச்சினை அல்லது வாய்ப்பினால் யார் பாதிப்பிற்குள்ளாகப் போகின்றனர் என்பதை புரிந்து கொள்வதற்கான ஒரு செயன்முறை ஆகும். இந்த பகுப்பாய்வு செயன்முறை, IFF பங்காளர்கள் சேவை செய்யும் சமூகங்களின் பல்வகைமையை கருத்தில் கொண்டு ,சரியான கேள்விகளை எழுப்பவும், ஊகங்களை சவாலுக்குட்படுத்தவும், அவர்கள் சாத்தியமான விளைவுகளை அடையாளம் காணவும் உதவும் என யவாறயலள வழ நயஉந நம்பிக்கை தெரிவித்தது.

இரண்டாம் நாள் நடைபெற்ற பாதுகாப்பான நியாயப்பிரசாரம் (ளுயகந யுனஎழஉயஉல) குறித்த அமர்வானது, சைரினி சிறிவர்தன அவர்களால் வழிநடத்தப்பட்டு, வி. வீரசிங்கம் அவர்களால் இணை வழிநடத்தப்பட்டது. இந்த அமர்வு, IFF பங்காளர்கள் தங்கள் திட்டங்களை செயல்படுத்தும் போது எதிர்கொள்ளும் அபாயங்கள் மற்றும் அவற்றை குறைக்கும் உத்திகள் குறித்து திறந்த மற்றும் நேர்மையான கலந்துரையாடலுக்கு வழிவகுத்தது. பாதுகாப்பான நியாயப்பிரசாரம் என்பது ஆதரவாளர்கள், தனிநபர்கள் மற்றும் சமூகங்களின் பாதுகாப்பையும் பாதுகாப்புத்தன்மையையும் உறுதி செய்யும் நடைமுறைகளை ஊக்குவிப்பதுடன், “எந்தவிதமான தீங்கும் ஏற்படுத்தக்கூடாது” என்ற கொள்கைக்கு முன்னுரிமை அளிக்கிறது.

பாதுகாப்பான நியாயப்பிரசாரம் குறித்த பயிற்சி, பிரசார பணிகளில் ஈடுபடும் போது பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத்தன்மையை கருத்தில் கொள்ள IFF பங்காளர்களைத் தயார்படுத்தியது. அவர்கள் தங்களது சொந்தத் திட்டங்களை உருவாக்கி வழங்க ஊக்குவிக்கப்பட்டனர். இதன் மூலம், அபாயங்களை நிர்வகிக்கும், எதிர்பாராத எதிர்மறை விளைவுகளை குறைக்கும் மற்றும் அதிகார தொடர்புகளைக் கருத்தில் கொள்ளும் உத்திகளை எவ்வாறு வடிவமைத்து செயல்படுத்தலாம் என்பதை IFF பங்குதாரர்கள் ஆராய்ந்தனர். பிற்பகல் அமர்வு, IFF பங்காளர்கள் தங்கள் பிரசாரத் திட்டங்களைப் பகிர்வதற்காக ஒதுக்கப்பட்டது.

இரண்டு நாள் பயிலமர்வினை நிறைவு செய்த திட்டமிடப்பட்ட அமர்வானது, IFF பங்காளர்கள் எவ்வாறு தங்கள் வலையமைப்புகளை வலுப்படுத்தி, ஆதரவுக்காக வளங்களை ஒருங்கிணைக்க முடியும் என்பதை ஆராய்கின்ற சவாலை பங்காளர்களிடையே விடுத்தது. இது, அபாயங்களை குறைத்தபடி மாற்றத்திற்காக எவ்வாறு ஒற்றுமையுடன் செயற்படலாம் என்பதை ஆராயும் ஒரு தளத்தை உருவாக்கியது. சமாதானத்துக்கான பயணப்பாதைகள் நிறுவனத்தினைப் பொறுத்தவரையில், உள்வாங்குகை மிக்க ஆட்சி மற்றும் சமூக ஒத்திசைவிற்கான சிவில் சமூகத்தின் தலைமையிலான தலையீடுகளை வலுப்படுத்துவதற்கு IFF பங்காளர்களின் திறன்களை வலுப்படுத்துவது அவசியமாகும்சமாதானத்துக்கான பயணப்பாதைகள் நிறுவனம், கனடா அரசால் நிதியளிக்கப்பட்டு, யுடiநெய ஐவெநசயெவழையெட நிறுவனத்தால் அமுல்ல்படுத்தப்படுகிறது.

Share:

Related News

நிகழ்வுகள் & செயல்பாடுகள்

புதிய ஆய்வானது பகிரங்க சேவை வழங்கலில் மக்களின் அனுபவம் தொடர்பான புதிய விடயங்களை வெளிக்கொண்டு வருகிறது.

சமாதானத்துக்கான பயணப்பாதைகள் ஆனது, அனைவரையும் உள்வாங்குகின்ற, சமத்துவமான மற்றும் பொறுப்புவாய்ந்த பகிரங்க சேவை வழங்கல் தொடர்பான சனசமூக கண்ணோட்டங்களைப் பதிவு செய்த ஆய்வறிக்கையை சமீபத்தில் நடைபெற்ற இணையவழி கருத்தரங்கில் வெளியிட்டது.

மேலும் வாசிக்க
நிகழ்வுகள் & செயல்பாடுகள்

உள்வாங்குகை மற்றும் பாதுகாப்பான நியாயப்பிரசாரத்தினை மேம்படுத்தல்

சமாதானத்துக்கான பயணப்பாதைகள் நிறுவனம் தனது IFF பங்காளர்களுக்காக புடீயூ மற்றும் பாதுகாப்பான நியாயப்பிரசாரம் (ளுயகந யுனஎழஉயஉல) குறித்த ஒரு பயிலமர்வினை நடத்தியது. ஜனவரி 27 மற்றும் 28 ஆகிய திகதிகளில் நடைபெற்ற இம் மும்மொழிப் பயிலமர்வு, பால்நிலைஅடிப்படையிலான பகுப்பாய்வு (புடீயூ), பாதுகாப்பான நியாயப்பிரசாரம், மொழி உரிமைகள் மற்றும் மனித உரிமை அடிப்படையிலான அணுகுமுறை (ர்சுடீயு) ஆகிய தலைப்புகளில் திட்டமிடப்பட்டுள்ள பயிலமர்வுகளின் தொடரில் முதலாவதாக அமைந்தது.

மேலும் வாசிக்க
நிகழ்வுகள் & செயல்பாடுகள்

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை தீர்மானம் 1325 (UNSCR 1325) இன் 25 ஆம் ஆண்டு நிறைவை சமாதானத்துக்கான பயணப்பாதைகள் கொண்டாடுகின்றது

“UNSCR 1325@25 – பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பின் 25 வருடங்களைக் கொண்டாடுதல்’’ என்ற நிகழ்வானது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை தீர்மானம் 1325 இன் 25 ஆம் ஆண்டு நிறைவை நினைவுகூறும் முகமாக சமாதானத்துக்கான பயணப்பாதைகளினால் ஒழுங்கு செய்யப்பட்டது. சமாதானம் மற்றும் பாதுகாப்பைக் கட்டியெழுப்புதலில் பெண்களின் முழுமையான மற்றும் சமமான பங்குபற்றுகையினை அங்கீகரிக்கின்ற மற்றும் ஊக்குவிக்கின்ற முதலாவது சர்வதேசக் கட்டமைப்பாக ருளுஊசு 1325 அமைந்துள்ளது.

மேலும் வாசிக்க