மனித அபிவிருத்தி தாபனம் (HDO)

ஒற்றுமையின் குரல் - சமநீதியான அரச சேவைகளுக்காக சனசமூகத்தை ஒன்றிணைத்தல்.

திட்டத்தின் ஒட்டுமொத்த இலக்கு

மொழி உரிமைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதனூடாக அரச கரும மொழிக் கொள்கையை திறன்;பட செயல்படுத்துவதை ஊக்குவித்து, சமூக செயற்பாடுகளில்; சமமான பங்கேற்பை உறுதி செய்வதன் மூலம், இந்த உரிமைகளை நிலைநிறுத்தி பொது சேவைகளை மற்றும் பொது நிறுவனங்களின் பொறுப்புணர்வை வலியுறுத்துவதனூடாக, குறிப்பாக பெண்கள், சிறுபான்மையினர் மற்றும் பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள குறைபாடுகள் உள்ளவர்களுக்கு பொது சேவைகளின் அணுகல் மற்றும் தரத்தை மேம்படுத்துதல்.

எதிர்பார்க்கப்படும் பெறுபேறுகள்

பல்வேறு குழுக்கள் நபர்கள் அவர்களின் உரிமைகளைப் பற்றி விழிப்புணர்வுடன் இருப்பதோடு அனைவரையும் உள்வாங்கிய, சமத்துவமான மற்றும் பொறுப்புகூறத்தக்க பொதுச் சேவைகளை கோருவதற்கான இயலுமையைக் கொண்டிருப்பார்கள்

தெரிவுசெய்யப்பட்ட செயற்திட்டப் பிரதேசங்களில் சமூக ஒத்திசைவை அதிகரித்தல்.

இலக்கு நிறுவனங்கள் அமைந்துள்ள சமூகங்களில் அரச கரும மொழிகள் கொள்கை (ழுடுP) மற்றும் அல்லது அதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்திருத்தல்

இலக்கு நிறுவனங்கள் அமைந்துள்ள சமூகங்களில் அரச கரும மொழிகள் கொள்கை (ழுடுP) மற்றும் அல்லது அதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்திருத்தல்

இலங்கையில் பன்முகத்தன்மை மற்றும் அரச சேவையில் அனைவரையும் உள்வாங்குதல், அரச சேவை வழங்கலில் புத்தாக்கம் மற்றும் அனைவரையும் உள்வாங்குதல் ஆகிய செயன்முறைகள் தொடர்பாக காலத்திற்கேற்ற, மிகவும் துல்லியமான தரவுகள் மற்றும் தகவல்களால் அறிவு செழுமைப்படுத்தப்பட்டிருத்தல்.

பிரதேச கவனக்குவிப்பு

கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டம்

எதிர்பார்க்கப்படும் பெறுபேறுகள்

புதிய ஆய்வானது பகிரங்க சேவை வழங்கலில் மக்களின் அனுபவம் தொடர்பான புதிய விடயங்களை வெளிக்கொண்டு வருகிறது.

சமாதானத்துக்கான பயணப்பாதைகள் ஆனது, அனைவரையும் உள்வாங்குகின்ற, சமத்துவமான மற்றும் பொறுப்புவாய்ந்த பகிரங்க சேவை வழங்கல் தொடர்பான சனசமூக கண்ணோட்டங்களைப் பதிவு செய்த ஆய்வறிக்கையை சமீபத்தில் நடைபெற்ற இணையவழி கருத்தரங்கில் வெளியிட்டது.

மேலும் வாசிக்க

உள்வாங்குகை மற்றும் பாதுகாப்பான நியாயப்பிரசாரத்தினை மேம்படுத்தல்

சமாதானத்துக்கான பயணப்பாதைகள் நிறுவனம் தனது IFF பங்காளர்களுக்காக புடீயூ மற்றும் பாதுகாப்பான நியாயப்பிரசாரம் (ளுயகந யுனஎழஉயஉல) குறித்த ஒரு பயிலமர்வினை நடத்தியது. ஜனவரி 27 மற்றும் 28 ஆகிய திகதிகளில் நடைபெற்ற இம் மும்மொழிப் பயிலமர்வு, பால்நிலைஅடிப்படையிலான பகுப்பாய்வு (புடீயூ), பாதுகாப்பான நியாயப்பிரசாரம், மொழி உரிமைகள் மற்றும் மனித உரிமை அடிப்படையிலான அணுகுமுறை (ர்சுடீயு) ஆகிய தலைப்புகளில் திட்டமிடப்பட்டுள்ள பயிலமர்வுகளின் தொடரில் முதலாவதாக அமைந்தது.

மேலும் வாசிக்க

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை தீர்மானம் 1325 (UNSCR 1325) இன் 25 ஆம் ஆண்டு நிறைவை சமாதானத்துக்கான பயணப்பாதைகள் கொண்டாடுகின்றது

“UNSCR 1325@25 – பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பின் 25 வருடங்களைக் கொண்டாடுதல்’’ என்ற நிகழ்வானது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை தீர்மானம் 1325 இன் 25 ஆம் ஆண்டு நிறைவை நினைவுகூறும் முகமாக சமாதானத்துக்கான பயணப்பாதைகளினால் ஒழுங்கு செய்யப்பட்டது. சமாதானம் மற்றும் பாதுகாப்பைக் கட்டியெழுப்புதலில் பெண்களின் முழுமையான மற்றும் சமமான பங்குபற்றுகையினை அங்கீகரிக்கின்ற மற்றும் ஊக்குவிக்கின்ற முதலாவது சர்வதேசக் கட்டமைப்பாக ருளுஊசு 1325 அமைந்துள்ளது.

மேலும் வாசிக்க