IFF நிதி
சமாதானத்துக்கான பயணப்பாதைகள், IFF நிதியினூடாக இலங்கையில் அனைவரையும் உள்வாங்கும் ஆட்சி மற்றும் சமூக ஒத்திசைவைக் கட்டியெழுப்புவதற்காக இலங்கையிலுள்ள சிவில் சமூக நிறுவனங்களுக்கு ஒத்துழைக்கின்றது.
IFF நிதிக்கு கோருதல் மேலதிக
விபரங்களுக்கு
IFF நிதிக்கு எண்ணக்கருக் குறிப்புக்களைக் கோருதல் - 2024. மேலதிக விபரங்களுக்கு கீழுள்ள டெப் இன் மீது கிளிக் பண்ணுங்கள்.
மூடப்பட்டுள்ளது
Related News

இலங்கை உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளனம் (FSLGA)
சனசமூகங்களுக்கிடையில் சமநீதியான நகரசபை சேவைகளை வழங்குவதின் ஊடாக சமூக ஒத்திசைவை வலுப்படுத்தல்

மனித இயற்கை வள அபிவிருத்தி அறக்கட்டளை
இலங்கையின் தென் மாகாணத்தில் LGBTQIA+ சமூகத்தின் உரிமைகளை பாதுகாத்தல் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல்

சிறுவர் அபிவிருத்தி நிதியம் (CDF)
திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச செயலகம் மற்றும் பொது வைத்தியசாலை ஆகியவற்றில் அனைவரையும் உள்வாங்கும் வகையிலான அரச சேவைகளை வழங்கல், மேம்படுத்தல் மற்றும் அதற்கான நியாயப்பிரச்சாரம் செய்தல்.

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம்.
சமூக ஒத்திசைவுக்கான ஒரு வழி விலக்குவதிலிருந்து வலுவூட்டலுக்கு

மனித அபிவிருத்தி தாபனம் (HDO)
ஒற்றுமையின் குரல் - சமநீதியான அரச சேவைகளுக்காக சனசமூகத்தை ஒன்றிணைத்தல்.

இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம (SDJF)
பாலினப் பொறுப்புணர்வுடன் கூடிய சேவை வழங்கல். (GESI)

கிராம அபிவிருத்தி நிறுவனம் (RDF)
இலங்கையில் ஒதுக்கப்பட்ட சனசமூகங்களை அமைதி, மீளிணக்கம் மற்றும் உள்வாங்கலுக்கான பொதுச்சேவைகளை அணுகுதல் என்பனவற்றில் வலுவூட்டுதல்.

தோட்ட கிராமிய கல்வி அபிவிருத்தி நிறுவனம்
நுவரெலியா மாவட்டம் நோர்வூட் மற்றும் தலவாக்கலை பிரதேச செயலக பிரதேசங்களில் சமூக ஒத்திசைவை வலுப்படுத்தல்

அபிவிருத்திக்கான சமூக அமைப்புக்களின் வலையமைப்பு
யாழ் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட சனசமூகங்கள் மற்றும் சேவை வழங்குநர் மத்தியில் உள்வாங்கும் ஆட்சி மற்றும் சமூக ஒத்திசைவை வலுப்படுத்தல்.

கிராம பெண்கள் முன்னணி (RWF)
உள்வாங்கல், சமத்துவம் மற்றும் பொறுப்புக்கூறும் வகையிலான அரச சேவை வழங்களுக்கு சனசமூகங்களை மேம்படுத்துதல்
எதிர்பார்க்கப்படும் பெறுபேறுகள்

பல்வேறு குழுக்கள் நபர்கள் அவர்களின் உரிமைகளைப் பற்றி விழிப்புணர்வுடன் இருப்பதோடு அனைவரையும் உள்வாங்கிய, சமத்துவமான மற்றும் பொறுப்புகூறத்தக்க பொதுச் சேவைகளை கோருவதற்கான இயலுமையைக் கொண்டிருப்பார்கள்.

இலக்கு நிறுவனங்கள் அமைந்துள்ள சமூகங்களில் அரச கரும மொழிகள் கொள்கை (ழுடுP) மற்றும் அல்லது அதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்திருத்தல்

அனைவரையும் உள்வாங்கிய சேவைகளை வழங்குவதற்கு இலக்கு நிறுவனங்களுக்கு ஆதரவு கிடைத்தல்

சிவில் சமூக அமைப்புகள் மற்றும் சகவாழ்வு மன்றங்கள், பரஸ்பர ஒத்துழைப்பை கட்டியெழுப்பி, முரண்பாடுகளை சமாதானம் நோக்கி மாற்றுவதற்கும், அனைவரையும் உள்ளடக்கிய பொதுச் சேவைகள் வழங்குவதற்கும் தேவையான ஆதரவைக் கொண்ட வலையமைப்பை உருவாக்கி, முன்னெடுப்பதற்காக செயல்படுதல்.

தெரிவுசெய்யப்பட்ட செயற்திட்டப் பிரதேசங்களில் சமூக ஒத்திசைவை அதிகரித்தல்.

இலங்கையில் பன்முகத்தன்மை மற்றும் அரச சேவையில் அனைவரையும் உள்வாங்குதல், அரச சேவை வழங்கலில் புத்தாக்கம் மற்றும் அனைவரையும் உள்வாங்குதல் ஆகிய செயன்முறைகள் தொடர்பாக காலத்திற்கேற்ற, மிகவும் துல்லியமான தரவுகள் மற்றும் தகவல்களால் அறிவு செழுமைப்படுத்தப்பட்டிருத்தல்.
IFF செயற்திட்டங்கள்

இலங்கை உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளனம் (FSLGA)
சனசமூகங்களுக்கிடையில் சமநீதியான நகரசபை சேவைகளை வழங்குவதின் ஊடாக சமூக ஒத்திசைவை வலுப்படுத்தல்

மனித இயற்கை வள அபிவிருத்தி அறக்கட்டளை
இலங்கையின் தென் மாகாணத்தில் LGBTQIA+ சமூகத்தின் உரிமைகளை பாதுகாத்தல் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல்

சிறுவர் அபிவிருத்தி நிதியம் (CDF)
திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச செயலகம் மற்றும் பொது வைத்தியசாலை ஆகியவற்றில் அனைவரையும் உள்வாங்கும் வகையிலான அரச சேவைகளை வழங்கல், மேம்படுத்தல் மற்றும் அதற்கான நியாயப்பிரச்சாரம் செய்தல்.

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம்.
சமூக ஒத்திசைவுக்கான ஒரு வழி விலக்குவதிலிருந்து வலுவூட்டலுக்கு

மனித அபிவிருத்தி தாபனம் (HDO)
ஒற்றுமையின் குரல் - சமநீதியான அரச சேவைகளுக்காக சனசமூகத்தை ஒன்றிணைத்தல்.

இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம (SDJF)
பாலினப் பொறுப்புணர்வுடன் கூடிய சேவை வழங்கல். (GESI)
1. சமாதானத்துக்கான பயணப்பாதைகள் பற்றிய அறிமுகம்.
சமாதானத்துக்கான பயணப்பாதைகள்: உள்வாங்கும் ஆட்சி மற்றும் சமூக ஒத்திசைவைக் கட்டியெழுப்பல் என்பது இலங்கையில் சமயம், இனம் மற்றும் மொழிக் குழுக்ககளிலும் அவற்றுக்கு மத்தியிலும் - குறிப்பாக, பெண்கள் மற்றும் பெண்பிள்ளைகளுக்கிடையிலும் மத்தியிலும் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் பலப்படுத்துவதனை இலக்காகக் கொண்ட ஐந்தாண்டுத் (2024 – 2029) திட்டமொன்றாகும்.
பெண்கள், பெண் பிள்ளைகள், LGBTQI+ நபர்கள் (ஓரினபாலீர்ப்பு பெண்கள், ஓரினபாலீர்ப்பு ஆண்கள், இருபால் உறவாளர்கள், மாற்றுப் பாலினத்தவர்கள், பால்புதுமையர்கள், இடையிலிறுத்தவர்கள், ஏனையோர்) ஆகியோருக்கு விஷேடமான கவனக் குவிப்புடன் பெண்கள், பெண் பிள்ளைகள், LGBTQI+ நபர்கள், இனம், மதம் மற்றும் மொழி ரீதியான சிறுபான்மையினர், இயலாமையுடையவர்கள் ஆகிய சகலரையும் உள்வாங்கும், சமத்துவமான மற்றும் பொறுப்புக்கூறத்தக்க பொதுச் சேவைகளை கோரும் விதத்தில் சிவில் சமூகக் குழுக்கள் மற்றும் தனிப்பட்ட நபர்களை வலுவூட்டுவதே IFF நிதியின் நோக்கமாகும்.
மேலும், சமாதானத்துக்கான பயணப்பாதைகள் செயற்திட்டம் சிவில் சமூக அமைப்புக்களுக்குத் தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குவதோடு, பொது நிருவாகம் மற்றும் மகளிர் விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சுக்கள், தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகம் மற்றும் ஐந்து மாகாணங்களின் ஏழு மாவட்டங்களில் அமைந்துள்ள பிராந்திய நிறுவனங்களுடன் இணைந்து செயற்பட்டு;
01. அனைவரையும் உள்வாங்குதல், சமத்துவமான மற்றும் பொறுப்புக்கூறக்கூடிய பொது சேவைகள்
02. மொழி உரிமைகள், பால்நிலைசார் பதிலிறுப்பு சேவைகள் மற்றும் சமூகக் கூட்டிணைவு ஆகிய பரப்புகளில் இலங்கையின் பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு (WPS) தேசிய செயல் திட்டத்தை (NAP) அமுல்படுத்தல்.
உள்வாங்கும் சேவைகள்
மக்கள் அனைவரும் தமக்கு அங்கீகாரம் கிடைப்பதாகவும், அவர்கள் அச்சமூகங்களின் ஒரு பகுதி என்றும் உணரும் ஒரு சூழலை உருவாக்குதல். அது உறவு, அனுபவம் சார்ந்தது.
சமத்துவமிக்க சேவைகள்
தடைகள் மற்றும் சிறப்புரிமைகள் இருப்பதென்பது மக்கள் அனைவருக்கும் சமமான வளங்கள் கிடைப்பதில்லை என்பதாகும். எனவே, எந்தவொரு நபரையும் ஒதுக்காத நடைமுறைகள் மற்றும் செயன்முறைகளை மேம்படுத்துவதன் மூலம் ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்வதையே சமத்துவமிக்க சேவைகள் இலக்காகக்கொண்டுள்ளது.
பொறுப்புக்கூறலுடன் கூடிய சேவைகள்
அரசாங்கம் அதன் நடவடிக்கைகளுக்கு பொறுப்புக்கூறுவது அதன் கடப்பாடு போன்று அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டுமென எதிர்பார்ப்பது மக்களின் உரிமையாகும். உதாரணமாக, தகவலறியும் உரிமை> முறைப்பாட்டுப் பொறிமுறைகள் மற்றும் குடிமக்கள் சாசனம் என்பனவற்றைக் குறிப்பிடலாம்.
பெண்கள் சமாதானம் மற்றும் பாதுகாப்பு நிதி (WPSF) தொடர்பாக எண்ணக்கரு குறிப்புக்களுக்கான அழைப்பு இவ்வருடம் நவம்பர் மாதத்தில் தொடங்கி வைக்கப்படும். இது பிரத்தியேகமாக, பெண்கள் உரிமைகள் சார்ந்த அமைப்புக்களுக்கானது (WROs).
பெண்கள் உரிமைகள் அமைப்புக்கள் (WROs): பெண்களின் உரிமைகள், பால்நிலை சமத்துவம், பெண்கள் மற்றும் அல்லது பெண்பிள்ளைகளுக்கு எதிரான வன்முறைகளை அல்லது பாலியல் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறையை இல்லாதொழித்தல் WROs இன் பிரதான செயற்பாடுகளாகும். நிறுவனத்தின் பணிக்கூற்று மற்றும் தொலைநோக்கில் பால்நிலை சமத்துவம், பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளை வலுவூட்டுதல் ஆகியவற்றுக்கான அர்ப்பணிப்பு பிரதிபலிக்க வேண்டும்.
2. IFF நிதிக்கு விண்ணப்பிப்பதற்கு தகுதிபெறும் நிறுவனங்கள்.
| வகை | விபரம் | தகுதிப் பிரமாணங்கள் |
| அரச சார்பற்ற நிறுவனங்கள் (NGOs) | உள்வாங்கும் ஆட்சி, மனித உரிமைகள், பயிற்சி/ கல்வி, பெண்கள் மற்றும் அபிவிருத்தி, பால்நிலை சமத்துவம், சமூக ஒத்திசைவு, மொழி உரிமைகள், வெளிப்படைத்தன்மை, சமதானத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும்/ அல்லது நல்லிணக்கம் ஆகியவற்றை ஊக்குவிப்பதை தமது பணிப்பாணையாகவோ அல்லது குறிக்கோள்களாகவோ கொண்டுள்ள முறையாக பதிவுசெய்துள்ள தன்னார்வ மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனங்கள். குறித்த நிறுவனங்கள் தேசிய, மாகாண, மாவட்ட மட்டத்தில் அல்லது பிரதேச செயலகப் பிரிவு மட்டத்தில் செயற்படுபவையாக இருக்கலாம். | எண்ணக்கருக் குறிப்பினை சமர்ப்பிக்கும் கட்டம் :
முன்மொழிவுக் கட்டம்:
|
| தொழில்வாண்மை நிறுவனங்கள் | சட்டத்தரணிகள், கணக்காளர்கள், வைத்தியர்கள், துறைசார் நிபுணர்கள் மற்றும் ஏனைய தொழில் வல்லுநர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கும் நிறுவனங்கள். அவை தன்னார்வ மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனங்களாக இருப்பதோடு அனைவரையும் உள்வாங்கிய ஆட்சி மற்றும் சமூக ஒற்றுமையை மேம்படுத்தும் செயற்பாடுகளில் இணைந்திருப்பது அவசியம். உதாரணம் : இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL), சமூக விஞ்ஞானிகள் மன்றம் (SSA) போன்றன. | |
| கல்வி / ஆராய்ச்சி நிலையங்கள் | அனைவரையும் உள்வாங்கிய ஆட்சி, சமூக ஒத்திசைவு மற்றும் பால்நிலை சமத்துவம் ஆகிய எண்ணக்கருக்கள் தொடர்பான ஆராய்ச்சிகளை நடாத்துதல், விருத்தி செய்தல், கொள்கைப் பரிசீலனை மற்றும் திருத்தங்களுக்கு பரிந்துரைகளை முன்வைத்தல் போன்ற விடயப் பரப்புக்களில் நிபுணத்துவமும் அனுபவமும் உள்ள நிறுவனங்கள். உதாரணம், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் அல்லது தன்னார்வ மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனங்கள். | |
| சனசமூக நிறுவனங்கள். | கிராம மற்றும் உள்ளூர் மக்களுடன் நெருக்கமாக இருந்து அவர்களின் பிரச்சனைகளில் அக்கறை செலுத்துகின்ற மற்றும் பிராந்திய மற்றும் தேசிய மன்றங்களில் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் இயங்குகின்ற தன்னார்வ மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனமாக பதிவுசெய்துள்ள நிறுவனங்கள். | மேலே குறிப்பிட்ட தகுதிவிதிகளே செல்லுபடியாகும். என்றாலும்,:
|
3. கூட்டிணைவு மற்றும் கூட்டுவலையமைப்பு
சிவில் சமூக அமைப்புக்களானவை (CSOs) ஏனைய சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும்/ அல்லது சகவாழ்வு மன்றங்களுடன் (CES) இணைந்து செயற்பட முடியும். அவ்வாறு, சிவில் சமூக அமைப்புக்கள் தமது தலையீடுகளுடன் நடைமுறைப்படுத்தும் செயற்திட்டங்களுக்குத் தேவையான ஒத்துழைப்புக்களைப் பெற்றுக்கொள்ளவோ அல்லது இணைந்து செயலாற்றவோ சகவாழ்வு மன்றங்களைத் தெரிவுசெய்யும் போது கீழே குறிப்பிட்டுள்ள பிரமாணங்களை கருத்திற்கொள்வது அவசியம் :
- உரிய அமைச்சின் கீழ் முறையாகப் பதிவு செய்யப்பட்ட அமைப்புக்கள்
- குறைந்தபட்சம் ஒரு வருடமாவது செயற்பாட்டிலிருத்தல்
- சமாதானத்துக்கான பயணப்பாதைகள் செயற்திட்டம் இலக்காகக்கொண்டுள்ள ஏதேனுமொரு பிரதேசச் சமாதானத்துக்கான பயணப்பாதைகள்.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அமைப்புகள் ஒன்றாக விண்ணப்பிக்கின்றபட்சத்தில், தலைமைப் பங்காளர் மாத்திரம் மேலே பிரிவு 2இல் விபரிக்கப்பட்ட தகுதிகாண் விதிமுறைகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதன்வழி, ஒப்பந்தமானது, தலைமைப் பங்காளருடன் மேற்கொள்ளப்படுவதுடன், அதுவே பெறப்படும் நிதிகளுக்கான பொறுப்புக் கூறல் அமைப்பாகவிருக்கும். ஏனைய பங்காளர்களுடன் தலைமைப் பங்காளர் ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டப்படுவதுடன், சமாதானத்துக்கான பயணப்பாதைகளுக்கு அதன் பிரதியொன்றை சமர்ப்பிக்க வேண்டும்.
சகவாழ்வு மன்றங்கள் CES என்பது தன்னார்வ மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனங்களாகும். இவை தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் (ONUR) கீழ் நிர்வகிக்கப்படுகின்றன. இன, மத மற்றும் மொழிக் குழுக்களுக்கு மத்தியில் உள்வாங்கல், தேசிய ஒத்திசைவு மற்றும் சகவாழ்விற்கு ஆதரவளிப்பதும் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதும் அதன் பணிப்பாணையாகும்.
4. முறைமை மதிப்பீட்டுக் கவன ஈர்ப்பு (Due Diligence) குறித்த செயன்முறை
IFF நிதியின் கீழ் நிதியளிப்பதற்கு சிவில் சமூக அமைப்புக்களானவை பாதுகாத்தல் பரிசீலனைகள் உள்ளடங்கலாக முறையான மதிப்பீட்டுச் செயன்முறையை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்திருப்பது முன்நிபந்தனையாகும்.
விண்ணப்பதாரிகள் தமது செயற்திட்டக் குறிப்புடன் பின்வரும் துணை ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு வேண்டப்படுவார்கள்:
- 01. பதிவுச் சான்றிதழ்
- 02. கடந்த இரண்டு வருடங்களுக்கான நிதிக்கணக்காய்வு மற்றும் அறிக்கைகள்.
- 03. நிறுவனமயப்படுத்தப்பட்ட நிதியியல் மற்றும் உள்ளகக் கட்டுப்பாட்டுக் கொள்கையின் பிரதி (இருக்கின்றபட்சத்தில்)
- 04. அமைப்பின் பாதுகாத்தற் கொள்னையின் பிரதி (இருக்கின்றபட்சத்தில்)
ஏனைய அனைத்து மதிப்பீட்டுச் செயன்முறைகளைப் பூர்த்திசெய்திருந்தாலும், பாதுகாப்புக் கொள்கை நடைமுறையில் இல்லாத சிவில் சமூக அமைப்புக்களுக்கு அத்தகையதொரு பாதுகாப்புக் கொள்கையை விருத்திசெய்வதற்கான திறனைக் கட்டியெழுப்பிக்கொள்வதற்கான வாய்ப்புக்களை சமாதானத்துக்கான பயணப்பாதைகள் செயற்திட்டம் தயார்செய்துகொடுக்கும்.
5. பிரதேச கவனக்குவிப்பு
செயற்திட்டத்தினால் இலக்கு வைக்கப்பட்ட மாவட்டங்களில் தமது தலைமைக் காரியாலயங்களைக் கொண்டுள்ள பெண்கள் உரிமைகள்சார் அமைப்புகளுக்கு முன்னுரிமையளிக்கப்படும். தேசிய மட்ட அல்லது மாகாண மட்ட பெண்கள்சார் உரிமை அமைப்புகள் செயற்திட்டத்தினால் இலக்கு வைக்கப்பட்ட புவியியல் அமைவிடங்களில் பணியாற்ற வேண்டியது கட்டாயமானதுடன், அவ்வாறு செயற்படுவதற்கான தமது இயலுமையையும் வெளிப்படுத்த வேண்டும்.
பின்வரும் இலக்கு வைக்கப்பட்ட நிறுவங்களினால் சேவை வழங்கப்படும் சமூகங்களில் பணியாற்றும் செயற்திட்டங்களுக்கு முன்னுரிமையளிக்கப்படும்.
| மாகாணம் | மாவட்டங்கள் | இலக்கு நிறுவனங்கள் |
| வடக்கு | யாழ்ப்பாணம் | 1. தலைமைப் பொலிஸ் நிலையம் – யாழ்ப்பாணம் |
| வவுனியா | 2. தலைமைப் பொலிஸ் நிலையம் – வவுனியா | |
| கிழக்கு | திருகோணமலை | 3. பிரதேச செயலகம் – திருகோணமலை பட்டினமும் சூழலும் |
| 4. மாவட்டப் பொது வைத்தியசாலை – திருகோணமலை | ||
| மத்திய | கண்டி | 5. பிரதேச செயலகம் – கண்டி கடவத்சதர – கங்கவட்ட கோரளை |
| 6. மாநகர சபை – கண்டி | ||
| நுவரெலியா | 7. மாவட்டச் செயலகம் – நுவரெலியா | |
| 8. மாநகர சபை – நுவரெலியா | ||
| 9. மாவட்டப் பொது வைத்தியசாலை - நுவரெலிய | ||
| 10. பிரதேச செயலகம் - தலவாக்கலை | ||
| 11. நீதவான் மற்றும் மாவட்ட நீதிமன்றம் – ஹற்றன் | ||
| 12. பிரதேச செயலகம் - நோர்வூட் | ||
| தெற்கு | காலி | 13. பிரதேச செயலகம் – காலி கடவத்சதர |
| 14. பெண்களுக்கான ஜேர்மன் – ஸ்ரீலங்கா நட்பு வைத்தியசாலை – கராபிட்டிய/காலி | ||
| வடமேல் | புத்தளம் | 15. பிரதேச செயலகம் - புத்தளம் |
6. எதிர்பார்க்கப்படும் பெறுபேறுகள்
கீழே குறிப்பிட்டுள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பெறுபேறுகளை இலக்காகக்கொண்டு எண்ணக்கரு முன்மொழிவுகள் தயார்செய்யப்பட வேண்டும். ஒரு செயற்திட்டம் ஒன்றுக்கு மேற்பட்ட பெறுபேறுகளில் கவனம் செலுத்துவதால் மாத்திரம் குறித்த செயற்திட்டத்தின் எண்ணக்கரு குறிப்புக்களுக்கு அதிக மதிப்பெண்கள் கிடைக்குமென எதிர்பார்க்க முடியாது. ஒரு செயற்திட்டத்தின் விளைவுகளை கவனத்திற்கொள்ளும் போது அதன் அகலத்தை விட ஆழத்திலேயே அதிக கவனம் செலுத்தப்படும்.
| குறிக்கோள்: பெண்கள், பெண் பிள்ளைகள், பால்புதுமையர்கள், இடையிலிறுத்தவர்கள், ஏனைய நபர்கள், இன, மத மற்றும் மொழி ரீதியான சிறுபான்மையினர், இயலாமையுடையவர்கள் ஆகிய அனைவருக்கும் சகலரையும் உள்வாங்கிய, சமத்துவமான மற்றும் பொறுப்புக்கூறத்தக்க பொதுச் சேவைகளை கோருவதற்காக குறிப்பாக பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகள், பால்புதுமையர்கள், இடையிலிறுத்தவர்கள், ஏனைய நபர்கள் உள்ளடங்கலாக சிவில் சமூகக் குழுக்கள் மற்றும் தனிப்பட்ட நபர்களின் திறனை அதிகரித்தல். | |
| பெறுபேறு 1 | பல்வேறு குழுக்கள்/ நபர்கள் (பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகள், பால்புதுமையர்கள், இடையிலிறுத்தவர்கள், ஏனைய நபர்கள், இன, மத மற்றும் மொழி ரீதியான சிறுபான்மையினர், இயலாமையுடையவர்கள்) அவர்களின் உரிமைகளைப் பற்றி விழிப்புணர்வுடன் இருப்பதோடு அனைவரையும் உள்வாங்கிய, சமத்துவமான மற்றும் பொறுப்புகூறத்தக்க பொதுச் சேவைகளை கோருவதற்கான இயலுமையைக் கொண்டிருப்பார்கள். |
| பெறுபேறு 2 | இலக்கு நிறுவனங்கள் அமைந்துள்ள சமூகங்களில் அரச கரும மொழிகள் கொள்கை (OLP) மற்றும்/ அல்லது அதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்திருத்தல். |
| பெறுபேறு 3 | அனைவரையும் உள்வாங்கிய சேவைகளை வழங்குவதற்கு இலக்கு நிறுவனங்களுக்கு ஆதரவு கிடைத்தல். |
| பெறுபேறு 4 | சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் சகவாழ்வு மன்றங்கள் தமக்கிடையே ஒரு கட்டியெழுப்பிக்கொள்வதுடன், முரண்பாடுகளை சமாதானத்தை நோக்கி வழிப்படுத்துவதற்கும் அனைவரையும் உள்வாங்கிய பொதுச் சேவைகளை வழங்குவதற்கும் தேவையான ஆதரவைத் வலையமைப்பைக். |
| பெறுபேறு 5 | தெரிவுசெய்யப்பட்ட செயற்திட்டப் பிரதேசங்களில் சமூக ஒத்திசைவை அதிகரித்தல். |
| பெறுபேறு 6 | இலங்கையில் பன்முகத்தன்மை மற்றும் அரச சேவையில் அனைவரையும் உள்வாங்குதல், அரச சேவை வழங்கலில் புத்தாக்கம் மற்றும் அனைவரையும் உள்வாங்குதல் ஆகிய செயன்முறைகள் தொடர்பாக காலத்திற்கேற்ற, மிகவும் துல்லியமான தரவுகள் மற்றும் தகவல்களால் அறிவு செழுமைப்படுத்தப்பட்டிருத்தல். |
7. செயற்திட்டக் காலம் மற்றும் வரவு செலவுத் திட்டம்
முன்மொழியப்படும் செயற்றிட்டத்தின் சிக்கல்தன்மை, பரப்பெல்லை மற்றும் தாக்கம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட முயற்சிகளுக்கு சமாதானத்திற்கான பயணப்பாதையானது, 10,000,000 இலங்கை ரூபாய்கள் வரையில் நிதியளிக்கும். இத்தகைய பாதீட்டைக் கொண்ட முன்னைய செயற்திட்டங்களின் உதாரணங்கள் உள்ளடங்கலாக இந்த அளவு மட்டத்தில் செயற்திட்டமொன்றை நடத்துவதற்கான வி;ண்ணப்பதாரியின் இயலளவு நிரூபிக்கப்பட வேண்டும். விண்ணப்பதாரிகள் 12 மாதம், 24 மாதம் அல்லது 36 மாதம் கொண்ட செயற்றிட்டங்களை அமுல்படுத்துவதற்கான தெரிவுகள் காணப்படும்.
IFF நிதியால் நிதியளிக்கப்படுகின்ற செயற்றிட்டங்களில் கீழே குறிப்பிட்டுள்ள செலவுகளை உள்ளடக்க முடியாதென்பதை தயவுடன் கவனத்திற்கொள்ளவும்.
- சொத்துக்களின் கொள்வனவு
- வாகனக் கொள்வனவு
- ஆடம்பர பொருள்கள் மற்றும் சேவைகளின் கொள்வனவு அல்லது வாடகை (உதாரணம்: போக்குவரத்துக்காக ஆடம்பர வாகனங்களை வாடகைக்கு அமர்த்துதல்)
- அரசாங்க நிறுவனங்கள் அல்லது பொது சேவை ஊழியர்களுக்கான நேரடி நிதி ஆதரவு
- ஒப்பந்தத்தைக் கைச்சாத்திடுவதற்கு முன்னரும் அது காலாவதியான பின்னருமாக மேற்கொள்ளப்படும் செலவினங்கள்
8. எண்ணக்கருக் குறிப்புகளுக்கான மதிப்பீட்டு விதிமுறைகளும் பூரண முன்மொழிவுகளுக்கான அழைப்பும்
| 1. அமைப்பின் ஆற்றல் | 30 புள்ளிகள் |
| முன்மொழியப்பட்ட செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான அமைப்பின் இயலுமை: அமைப்பியல் ரீதியான அனுபவம் (முகாமைத்துவமும் செயற்றிட்ட அமுலாக்கமும்). இந்த அமைப்பானது எவ்வளவு காலம் செயற்பாட்டிலுள்ளது? இந்த அமைப்பிடம் கணக்காய்வு செய்யப்பட்ட கணக்குகள் உள்ளனவா? அமைப்பின் வருடாந்த பாதீடு மற்றும் முன்மொழியப்பட்டுள்ள பாதீடு என்பவற்றின் அளவினை ஒப்பிடுதல். இவ்வமைப்பு ஏற்கெனவே பூர்த்தி செய்த அல்லது தற்பொழுது நடைமுறைப்படுத்துகின்ற செயற்றிட்டங்களையும் நிதியீட்டாளர்களையும் மீளாய்வு செய்தல். பணியாளர்களின் அமைவுச் சேர்க்கை (எண்ணிக்கை, உள்ளக நிபுணத்துவம்). | 15 |
| புவியியல் ரீதியாக மையப்படுத்தியுள்ள பிரதேசங்களில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியுள்ள நடவடிக்கைகள் தொடர்பான அனுபவம். அனைவரையும் உள்வாங்கிய ஆட்சி மற்றும் /அல்லது சமூக சகவாழ்வு போன்ற தொனிப்பொருள்கள் தொடர்பாக நிறுவனத்தின் அனுபவத்தையும் நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள செயற்திட்டங்களையும் மீளாய்வு செய்தல். | 15 |
| 2. முன்மொழியப்படும் செயற்பாடுகளின் சிறப்பு | 50 புள்ளிகள் |
| முன்மொழிந்துள்ள நடவடிக்கைகள் உள்வாங்களுக்கான எதிர்கால நிதியின் குறிக்கோள்களுக்கு பொருத்தமாக இருப்பதுடன், அவை அனைவரையும் உள்வாங்கிய ஆட்சி மற்றும்/ அல்லது சமூக சகவாழ்வினை வலுப்படுத்தும் நோக்கம் கொண்டவை. | 10 |
| முன்மொழிந்துள்ள நடவடிக்கைகள் உத்தேச செயற்திட்ட இடங்களிலுள்ள இலக்குக் குழுக்களின் முன்னுரிமைகளுக்கு பொருத்தமானவை. | 10 |
| பல பகுதிகளுக்கும் சிறிதளவான வளங்களைப் பகிர்வதைவிட ஒன்று அல்லது இரண்டு செயற்திட்டப் பகுதிகளில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக செயற்திட்டம் வடிவமைக்கப்பட்டிருத்தல் (செயற்பாடுகளின் வடிவம் அகலமாக இருப்பதைவிட ஆழமாக இருத்தல்). | 10 |
| முன்மொழிந்துள்ள நடவடிக்கைகளில், குறிப்பாக பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளுக்கான பால்நிலை சமத்துவத்தை எளிதுபடுத்தும் குறிப்பான அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. | 10 |
| முன்மொழியப்படும் செயற்பாடுகள் புத்தாக்கமுடையனவாக இருத்தல். | 10 |
| 3. அடைவு | 10 புள்ளிகள் |
| மதிப்பிடப்பட்ட பாதீடு மற்றும் நேரடியானதும் மறைமுகமானதுமான பயனாளிகள் சரியான அளவிலும் நியாயமானதாகவும் இருத்தல். | 10 |
| 4. நிலைபேண் தன்மை | 10 புள்ளிகள் |
| முன்மொழியப்படும் செயற்பாடுகள் நிலைத்து நிற்கக் கூடிய முடிவுகளைக் கொண்டு வரக்கூடிய சாத்தியங்களைக் கொண்டிருத்தல். | 10 |
| மொத்த புள்ளிகள் | 100 |
10.நேர அட்டவணை
| விபரம் | ஒக். 2024 | நவ. 2024 | டிச 2024 | ஜன 2025 | பெப் 2025 | மார்ச் 2025 |
| எண்ணக்கரு குறிப்புகளுக்கான அழைப்பு ஆரம்பம் | 15 | |||||
| எண்ணக்கரு குறிப்புகளைச் சமர்ப்பிப்பதற் கான இறுதித் திகதி | 15 | |||||
| விண்ணப்பத்தின் நிலை குறித்து விண்ணப் பதாரிகளுக்கு அறிவித்தல் | 20 | |||||
| பூரண முன்மொழிவுகளைச் சமர்ப்பிப்பதற் கான இறுதித் திகதி | 12 | |||||
| விண்ணப்பத்தின் நிலை குறித்து விண்ணப் பதாரிகளுக்கு அறிவித்தல் | 14 | |||||
| ஒப்பந்தமிடல் ஆரம்பம் | 31 |
எவ்வாறு விண்ணப்பிப்பது?
உங்கள் தகுதியை மதிப்பீடு செய்கின்ற “பகுதி அ : தகுதியைக் கண்டறிதல் படிவம்” எனும் இணையவழி ஆய்வினைப் பூர்த்திசெய்யவும்.
நீங்கள் தகுதிபெற்றால் சமாதானத்துக்கான பயணப்பாதைகள் செயற்திட்டம் உங்களுக்கு மின்னஞ்சலினூடாக எண்ணக்கரு குறிப்பு மாதிரிப் படிவத்தை அனுப்பும்.
எண்ணக்கருக் குறிப்புப் படிவத்தை மேலே பகுதி 4 இன் கீழ் குறிப்பிட்டுள்ளவாறு அதனை வலுப்படுத்தும் ஆவணங்களுடன் 2024, நவம்பர் 15 ஆம் திகதி 23:59 மணிக்கு முன்னர் சமர்ப்பிக்கவும். எண்ணக்கரு குறிப்புக்களை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய ஏதேனுமொரு மொழியில் பூர்த்திசெய்ய முடியும். எண்ணக்கருக் குறிப்பு மாதிரிப்படிவத்தில் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை தயவுசெய்து பின்பற்றவும்.









