சமாதானத்துக்கான பயணப்பாதைகள் ஆனது, அனைவரையும் உள்வாங்குகின்ற, சமத்துவமான மற்றும் பொறுப்புவாய்ந்த பகிரங்க சேவை வழங்கல் தொடர்பான சனசமூக கண்ணோட்டங்களைப் பதிவு செய்த ஆய்வறிக்கையை சமீபத்தில் நடைபெற்ற இணையவழி கருத்தரங்கில் வெளியிட்டது. இவ் ஆய்வினை மேற்கொள்கின்ற பொறுப்பினை சமாதானத்துக்கான பயணப்பாதைகள் ஆனது ஏநசவைé சுநளநயசஉ நிறுவனத்திற்கு வழங்கியிருந்தது. இவ் ஆய்வானது சமாதானத்துக்கான பயணப்பாதைகள் இனால் 7 மாவட்டங்களில் உள்ள 15 அரச நிறுவனங்கள் தொடர்பாக திட்டமிடப்பட்டுள்ள தலையீடுகளுக்கான ஆரம்பநிலைத் தரவுகளை சேகரித்து கொள்வதற்கான கருவியொன்றாக மேற்கொள்ளப்பட்டது. யுடiநெய ஐவெநசயெவழையெட நிறுவனம் செயல்படுத்தும் 5 ஆண்டு கால திட்டமான சமாதானத்துக்கான பயணப்பாதைகள் இற்கு கனேடிய அரசு நிதி அளிக்கின்றது.
மேற்கூறப்பட்ட இணையவழி கருத்தரங்கிற்கு முன்பாக, சமாதானத்துக்கான பயணப்பாதைகள் ஆனது, அரச அதிகாரிகள் குழுவுடன் முக்கிய ஆய்வுக் கண்டுபிடிப்புகளை பகிர்ந்து கொள்ள ஒரு வட்டமேசை கலந்துரையாடலை முன்னெடுத்தது. இந்த கலந்துரையாடலானது, பல்வேறு சமூகங்கள் பகிரங்க சேவைகளை எவ்வாறு அனுபவிக்கின்றன என்பதை பகிரங்க சேவைகளை வழங்குகின்ற பிரதிநிதிகள் கவனமாக சிந்திப்பதற்கான ஒரு மேடையாக அமைந்தது. மேலும், பகிரங்க சேவை வழங்கலானது அனைவரையும் உள்வாங்கியதாக, சமமானதாக, மற்றும் பொறுப்புக்கூறும் வகையில் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பான விடயங்களை கொள்கை உரையாடல்களின் போது ஆதாரங்கள் வடிவில் கொண்டு வருவதற்கான முக்கிய வாய்ப்பையும் உருவாக்கியது.
அந்த வட்டமேசை கலந்துரையாடலுக்கு பின்னர், அபிவிருத்திக்கான அமைப்புகள், சிவில் சமூக அமைப்புகள், பெண்கள் உரிமை அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் மற்றும் கல்வியாளர்கள் கலந்து கொண்ட இணையவழி கருத்தரங்கும் நடைபெற்றது. வட்டமேசை கலந்துரையாடலிலும் இணையவழி கருத்தரங்கிலும் வலியுறுத்தியபடி, இந்த ஆய்வானது ‘கண்ணோட்டங்களின் பகுப்பாய்வு’ ஒன்றே தவிர இது ஒரு ‘செயற்திறன் மதிப்பீடு’ அல்ல. ஆகவே, இவ் ஆய்வானது எவ்வெவ் விடயங்கள் சரியாக செயற்படுகின்றன, எவையெவை சரியாக செயற்படவில்லை என்பதை மதிப்பிடுவதற்கான முக்கிய கருவியாக பயன்படுகிறது. இது ஆதாரபூர்வமான ஆய்வு மற்றும் அமுல்படுத்தக்கூடிய நல்ல முன்மாதிரிகளையும் வழங்குவதனூடாக பகிரங்க சேவை தொடர்பான கொள்கை வடிவமைப்பிற்கு உதவுகிறது. குறிப்பாக, இவ் ஆய்வானது சமூகத்தில் இலகுவில் பாதிக்கப்படக்கூடிய மற்றும் கவனிக்கப்படாத மக்களின் கண்ணோட்டத்தில் பகிரங்க சேவை வழங்கலைப் பார்க்கும் ஒரு அரிய வாய்ப்பை வழங்குவதுடன், பகிரங்க சேவைகள் ஏனைய அனைவருக்கும் வழங்கப்படுகின்ற அதே முறைமையிலா இக்குழுக்களுக்கும் வழங்கப்படுகின்றன என்ற கேள்வியினை எம்மை நாமே கேட்க வைக்கின்றது.
இணையவழி கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளராக செயற்பட்ட சமாதானத்துக்கான பயணப்பாதைகள் திட்டத்தின் கள பணிப்பாளரான சயிரீனி சிறிவர்தன (ஊலசநநெ ளுசைறையசனாயயெ) அவர்கள் தனது தொடக்க உரையில், இச்செயற்திட்டத்திpற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள 15 துணை தேசிய நிறுவனங்கள் பெரும்பாலும் யுடiநெய ஐவெநசயெவழையெட நிறுவனத்தின் முந்தைய செயற்திட்டங்களின் கீழ் (கனேடிய அரசினால் நிதியளிக்கப்பட்ட செயற்திட்டங்களின் மூலம்) அரச கரும மொழிக் கொள்கை அமுலாக்கத்தில் ஈடுபட்டிருந்த அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு தெரிவு செய்யப்பட்டதாக தெரிவித்தார். சமாதானத்துக்கான பயணப்பாதைகள் செயற்திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக, முந்தைய செயற்திட்டங்களின் கீழ் உருவாக்கப்பட்ட மொழித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான ஆதரவினை இந்த நிறுவனங்களுக்கு வழங்குதலும் உள்ளடங்கும் என்றார். சில மாவட்டங்களில் ஒன்று அல்லது இரண்டு பகிரங்க நிறுவனங்களே ஆய்வில் சேர்க்கப்பட்டுள்ளதால், இந்த ஆய்வின் முடிவுகளை பொதுவாக அனைவருக்கும் பொருந்தும் வகையில் பொதுமைப்படுத்தக் கூடாது எனவும் அவர் எச்சரித்தார். இருப்பினும், இம்மட்டுப்பாடுகளுக்கு அப்பால், இந்த ஆய்வு “உள்வாங்குகை, ஒப்புரவு மற்றும் பொறுப்புணர்வு ஆகியவை மாவட்டங்களுக்குள் எவ்வாறு செயற்படுத்தப்படுகின்றன என்பதை சுட்டிக்காட்டும் முக்கிய ஆதாரமாகவும், மேலும் பகிரங்க சேவை வழங்கல் தொடர்பான மேலதிக விரிவான ஆய்வுகளை ஊக்குவிக்கும் ஒரு கருவியாகவும் இருக்கும்” என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.
கனேடிய உயர் ஸ்தானிகராலயத்தின் அபிவிருத்தி ஆலோசகர் மற்றும் ஒத்துழைப்பு பிரிவின் தலைவர் கிறில் லோடனவ் (முசைடை டுழசனயழெஎ) தனது உரையில், இலங்கையின் பன்மைத்துவ சமுதாயங்களிடையே சமாதானம், நல்லிணக்கம் மற்றும் சமூக ஒத்திசைவினை மேம்படுத்துவதற்காக கனேடிய அரசாங்கத்தின் “நம்பகமான பங்காளரான யுடiநெய ஐவெநசயெவழையெட மூலம் அமுல்படுத்தப்படும் சமாதானத்துக்கான பயணப்பாதைகள் செயற்திட்டத்திற்கு நிதியளிப்பதில் கனேடிய அரசு பெருமைப்படுகிறது” என்று தெரிவித்தார். இந்த செயற்திட்டமானது அடிப்படையில் உள்வாங்குகை, ஒப்புரவு மற்றும் பொறுப்புணர்வு ஆகியவற்றை மையமாகக் கொண்டது என்றும் அவர் குறிப்பிட்டார். “சேவை பயனர்களின் யதார்த்த அனுபவங்களை மையமாகக் கொண்டு, இந்த ஆய்வு இலங்கை அரசும் அதன் அபிவிருத்தி பங்காளர்களும் நடைமுறைப்படுத்தக்கூடிய சீர்திருத்தங்களுக்கு வழிகாட்டும் மதிப்புமிக்க தகவல்களை வழங்குகிறது” என்றும் அவர் கூறினார்.
ஆய்வின் பிரதான கண்டுபிடிப்புகளின் முன்மொழிவினை ஆரம்பித்து வைத்த (ஏநசவைé சுநளநயசஉ நிறுவனத்தின் ஊடகம் மற்றும் அரசியல் பிரிவின் தலைமை அதிகாரி தீபாஞ்சலி அபேவர்தன (னுநநியதெயடநை யுடிநலறயசனநநெ) அவர்கள், “இந்த நிகழ்விலிருந்து நீங்கள் மூன்று முக்கியமான விடயங்களை எடுத்துச் செல்வீர்கள் என்று நான் உறுதியளிக்கிறேன். சிறப்பாக செயற்பட்டுள்ள விடயங்கள் யாவை என்பதை அறிந்துகொள்வீர்கள். நடைமுறையில் செயற்படுத்தக்கூடிய, வேறு இடங்களிலும் அமுல்படுத்தக்கூடிய சிறந்த மாதிரிகளையும் அறிந்து கொள்வீர்கள். மேலும், அமுல்படுத்தக்கூடிய பரிந்துரைகளையும் நடைமுறை அம்சங்களையும் அறிந்து கொள்வீர்கள்” என்று தெரிவித்தார். ஆய்விற்காகப் பயன்படுத்தப்பட்ட முறைமையியலை விளக்குகையில், கருத்து கணிப்பாய்வினை மேற்கொள்வதற்கு முன்பாக 7 மாவட்டங்களிலும் உள்ள அரசு அதிகாரிகள் மற்றும் ஓரங்கப்பட்ட சமூகங்களின் பிரதிநிதிகளுடன் பிரதான தகவல் வழங்குநர்களுடனான நேர்காணல்கள் (முநல ஐகெழசஅயவெ ஐவெநசஎநைறள) நடத்தப்பட்டதாக கூறினார். இது உள்ர்மட்ட சவால்களைப் புரிந்துகொள்ளவும், கருத்து கணிப்பாய்வின் வடிவமைப்பை மேம்படுத்தவும் உதவியது என குறிப்பிட்டார். 7 மாவட்டங்களில் உள்ள 15 அரச நிறுவனங்களிலிருந்து சேவைகளைப் பெற்றுக் கொண்டு வெளியேறுபவர்களுடன் மேற்கொள்ளப்பட்ட வெளியேறும்போதான நேர்காணல்கள் (நஒவை வெநசஎநைறள) மூலமாக இந்த ஆய்வில் மொத்தமாக 824 தனிநபர்களிடமிருந்து பதில்கள் சேகரிக்கப்பட்டன. பகிரங்க சேவை வழங்கல் குறித்த பார்வைகள் மூன்று முக்கிய கோணங்களில் மதிப்பிடப்பட்டன: உள்வாங்குகை (ஐஉடரளiஎவைல), ஒப்புரவு (நுஙரவைல), மற்றும் பொறுப்புணர்வு (யுஉஉழரவெயடிடைவைல). மேலும், வெளியேறும்போது மேற்கொள்ளப்பட்ட நேர்காணல்களுக்கு பின்னர், இயலாமைகளை உடைய நபர்கள், இன மற்றும் மத சிறுபான்மையினர் மற்றும் டுபுடீவுஞஐூ சமூகத்தைச் சேர்ந்தவர்களுடன் குவிமையக் குழு கலந்துரையாடல்கள் (குழஉரள புசழரி னுளைஉரளளழைளெ) மற்றும் மேலதிகமான பிரதான தகவல் வழங்குநர்களுடனான நேர்காணல்கள் நடத்தப்பட்டு, கருத்து கணிப்பாய்வின் முடிவுகள் ஆழமான புரிதலுடன் உறுதிப்படுத்தப்பட்டன.
ஏநசவை சுநளநயசஉ நிறுவனத்தின் ஊடகம் மற்றும் அரசியல் அணித்தலைவர் மஹோதி பீரிஸ் (ஆயாழளாயனi நசைளை) பிரதான கண்டுபிடிப்புகள் மற்றும் பரிந்துரைகளை விளக்குகையில், இந்த ஆய்வு “உள்வாங்குகை, ஒப்புரவு மற்றும் பொறுப்புணர்வு ஆகியவற்றை பிரதிபலிக்கும் தெளிவான உதாரணங்களை” வெளிப்படுத்தியதாக குறிப்பிட்டார். இவ்வுதாரணங்களை வேறு இடங்களிலும் இலகுவாக நடைமுறைப்படுத்த முடியுமென்றும், அவை பகிரங்க சேவை வழங்கலை மேம்படுத்துவதற்கான மாதிரிகளாகப் பயன்படக்கூடியவை என்றும் குறிப்பிட்டார். பல உதாரணங்கள் பகிரப்பட்ட நிலையில் அவை, பொறுப்புவாய்ந்த தலைமைத்துவம், பன்மைத்துவத்தினை பிரதிபலிக்கின்ற பணியாளர் அமைப்பு, எளிமைப்படுத்தப்பட்ட செயன்முறைகள் மற்றும் இலக்கு வைக்கப்பட்ட பயிற்சிகள் என்பன எவ்வாறு பாதிக்கப்பட்ட மக்கள் கௌரவமாக நடாத்தப்படுவதனை உறுதி செய்ய உதவுகின்றன என்பதனையும் வலியுறுத்தின.
இந்த அறிக்கையின் கண்டுபிடிப்புகளுக்கு நல்ல வரவேற்பு காணப்பட்டதுடன் அனைவரும் இது தொடர்பாக ஆர்வத்துடன் ஈடுபட்டிருந்தனர். பகிரங்க சேவை வழங்கல் குறித்த சமுதாய கண்ணோட்டங்களை உள்ளடக்கிய இந்த அறிக்கை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளதுடன் அவை பொதுமக்கள் பார்வைக்கும் பதிவிறக்கத்திற்கும் ஏற்ற வகையில் சமாதானத்துக்கான பயணப்பாதைகள் இன் இணையதளத்தில் கிடைக்க கூடியதாக உள்ளன.