ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை தீர்மானம் 1325 (UNSCR 1325) இன் 25 ஆம் ஆண்டு நிறைவை சமாதானத்துக்கான பயணப்பாதைகள் கொண்டாடுகின்றது

பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு 25 வருடங்களைப் பூர்த்தி செய்கின்றது: இலங்கையில் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதில் பெண்களின் தலைமைத்துவத்தினைக் கொண்டாடுதல்.

“UNSCR 1325 @25 - பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பின் 25 வருடங்களைக் கொண்டாடுதல்’’ என்ற நிகழ்வானது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை தீர்மானம் 1325 இன் 25 ஆம் ஆண்டு நிறைவை நினைவுகூறும் முகமாக சமாதானத்துக்கான பயணப்பாதைகளினால் ஒழுங்கு செய்யப்பட்டது. சமாதானம் மற்றும் பாதுகாப்பைக் கட்டியெழுப்புதலில் பெண்களின் முழுமையான மற்றும் சமமான பங்குபற்றுகையினை அங்கீகரிக்கின்ற மற்றும் ஊக்குவிக்கின்ற முதலாவது சர்வதேசக் கட்டமைப்பாக ருளுஊசு 1325 அமைந்துள்ளது. பெண்களை மோதல்களின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பதற்கும், நிலைமாற்ற சமாதானம், நல்லிணக்கம் மற்றும் ஆட்சி என்பவற்றில் பெண்களின் பிரதான வகிபங்கினை அங்கீகரிப்பதற்குமான இச் சர்வதேச கட்டமைப்பில் ஈர்க்கப்பட்டே, பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான இலங்கையின் முதலாவது தேசிய செயற்திட்டம் (2023-2027) ஆக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதில் பெண்களின் தலைமைத்துவத்தினைக் கொண்டாடுவதனூடாக சமாதானத்துக்கான பயணப்பாதைகள்- உள்வாங்கும் ஆட்சி மற்றும் சமூக ஒத்திசைவைக் கட்டியெழுப்பல் ஆனது இம்முக்கிய நிகழ்வை நினைவு கூர்ந்தது. இந்நிகழ்வில் சமாதானத்துக்கான பயணப்பாதைகள்- பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு நிதியத்தினால் வழங்கப்பட்ட நிதியின் கீழ் பெண்கள் உரிமைகளுக்கான அமைப்புக்களால் செய்யப்பட்ட மகத்தான பணிகள் வெளிக்காட்டப்பட்டன. பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு நிதியமானது, இலங்கையின் பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான தேசிய செயற்திட்டம் மற்றும் ருளுஊசு 1325 செயற்பாடுகள் மற்றும் ஏனைய தொடர்புடைய ஐக்கிய நாடுகள் சபை தீர்மானங்களை மேம்படுத்துவதற்கான செயற்திட்டங்களை அமுல்படுத்தும் நோக்கிற்காக இலக்கு வைக்கப்பட்ட ஏழு மாவட்டங்களிலுள்ள (யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, கண்டி, நுவரெலியா, காலி மற்றும் புத்தளம்) பெண்கள் உரிமைகளுக்கான அமைப்புக்களுக்கு ஆதரவளிக்கின்றது.

பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான தேசிய செயற்திட்டம் மற்றும் ருளுஊசு 1325 செயற்பாடுகளின் அமுலாக்கத்தினை மேம்படுத்தும்பொருட்டு அரசாங்க அதிகாரிகள் மற்றும் பெண்கள் உரிமைகளுக்கான அமைப்புக்களுக்கிடையான தொடர்புகளைப் பலப்படுத்துவதில் ருNளுஊசு 1325@25 நிகழ்வு முக்கிய பங்களிப்பு செய்தது. அத்துடன் இந்நிகழ்வானது பெண்கள் உரிமைகளுக்கான அமைப்புக்கள் தமது செயல்திறன் ஒருங்கிணைவு மற்றும் ஒத்துழைப்பினை மேம்படுத்தும் எண்ணத்துடன் தங்களிடையே வலையமைப்பொன்றினை ஏற்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்பினையும் வழங்கியது.

சமாதானத்துக்கான பயணப்பாதைகள்- உள்வாங்கும் ஆட்சி மற்றும் சமூக ஒத்திசைவைக் கட்டியெழுப்பல் (2024-2029) ஆனது கனேடிய அரசாங்கத்தினால் நிதியளிக்கப்பட்டு, அலினியா இன்டர்நேனலினால் அமுல்படுத்தப்படுகின்ற செயற்திட்டமொன்றாகும். சமாதானத்துக்கான பயணப்பாதைகளின் முன்னெடுப்புக்களுள் ஒன்றான பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு நிதியானது இலங்கையில் வேறுபட்ட மத, இன மற்றும் மொழி சமுதாயங்களிடையே, குறிப்பாக பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளிடையே சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தினை மேம்படுத்துவதனை இலக்காகக் கொண்டுள்ளது.

Share:

Related News

நிகழ்வுகள் & செயல்பாடுகள்

புதிய ஆய்வானது பகிரங்க சேவை வழங்கலில் மக்களின் அனுபவம் தொடர்பான புதிய விடயங்களை வெளிக்கொண்டு வருகிறது.

சமாதானத்துக்கான பயணப்பாதைகள் ஆனது, அனைவரையும் உள்வாங்குகின்ற, சமத்துவமான மற்றும் பொறுப்புவாய்ந்த பகிரங்க சேவை வழங்கல் தொடர்பான சனசமூக கண்ணோட்டங்களைப் பதிவு செய்த ஆய்வறிக்கையை சமீபத்தில் நடைபெற்ற இணையவழி கருத்தரங்கில் வெளியிட்டது.

மேலும் வாசிக்க
நிகழ்வுகள் & செயல்பாடுகள்

உள்வாங்குகை மற்றும் பாதுகாப்பான நியாயப்பிரசாரத்தினை மேம்படுத்தல்

சமாதானத்துக்கான பயணப்பாதைகள் நிறுவனம் தனது IFF பங்காளர்களுக்காக புடீயூ மற்றும் பாதுகாப்பான நியாயப்பிரசாரம் (ளுயகந யுனஎழஉயஉல) குறித்த ஒரு பயிலமர்வினை நடத்தியது. ஜனவரி 27 மற்றும் 28 ஆகிய திகதிகளில் நடைபெற்ற இம் மும்மொழிப் பயிலமர்வு, பால்நிலைஅடிப்படையிலான பகுப்பாய்வு (புடீயூ), பாதுகாப்பான நியாயப்பிரசாரம், மொழி உரிமைகள் மற்றும் மனித உரிமை அடிப்படையிலான அணுகுமுறை (ர்சுடீயு) ஆகிய தலைப்புகளில் திட்டமிடப்பட்டுள்ள பயிலமர்வுகளின் தொடரில் முதலாவதாக அமைந்தது.

மேலும் வாசிக்க
நிகழ்வுகள் & செயல்பாடுகள்

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை தீர்மானம் 1325 (UNSCR 1325) இன் 25 ஆம் ஆண்டு நிறைவை சமாதானத்துக்கான பயணப்பாதைகள் கொண்டாடுகின்றது

“UNSCR 1325@25 – பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பின் 25 வருடங்களைக் கொண்டாடுதல்’’ என்ற நிகழ்வானது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை தீர்மானம் 1325 இன் 25 ஆம் ஆண்டு நிறைவை நினைவுகூறும் முகமாக சமாதானத்துக்கான பயணப்பாதைகளினால் ஒழுங்கு செய்யப்பட்டது. சமாதானம் மற்றும் பாதுகாப்பைக் கட்டியெழுப்புதலில் பெண்களின் முழுமையான மற்றும் சமமான பங்குபற்றுகையினை அங்கீகரிக்கின்ற மற்றும் ஊக்குவிக்கின்ற முதலாவது சர்வதேசக் கட்டமைப்பாக ருளுஊசு 1325 அமைந்துள்ளது.

மேலும் வாசிக்க