பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு நிதி
எண்ணக்கரு குறிப்புகளைக் கோருதல்

சமாதானத்துக்கான பயணப்பாதைகள் செயற்திட்டமானது, இலங்கையின் பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு தேசிய செயற்திட்டத்தினை அமுல்படுத்துவதற்கு ஆதரவளிக்கக் கூடிய எண்ணக்கருக் குறிப்புகளைச் சமர்ப்பிப்பதற்கு பெண்கள் உரிமைகள்சார் அமைப்புகளுக்கு (WROs) அழைப்பு விடுக்கிறது. எண்ணக்கருக் குறிப்புகள் தெரிவின் பின்னர், தெரிவு செய்யப்பட்ட அமைப்புகள் பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு நிதியின் இலக்குகளையும் கீழே விபரிக்கப்பட்டுள்ள தகுதிகளைப் பூர்த்தி செய்யும்பட்சத்தில், முழுமையான முன்மொழிவொன்றைச் சமர்ப்பிப்பதற்கு அழைப்பு விடுக்கப்படும்.

தகுதிகாண் தேவைகளைப் பூர்த்தி செய்யாத ஆனால் மேலதிக தேடலுக்குத் தகுதியாகும் செயற்திட்டக் குறிப்புகளைக் கொண்ட பெண்கள் உரிமைகள்சார் அமைப்புகள் தமது ஆற்றலைக் கட்டியெழுப்புவதற்காக வடிவமைக்கப்பட்ட நிகழ்ச்சித் திட்டமொன்றில் சேர்ந்து கொள்வதற்கான வாய்ப்பைப் பெறும். இந்நிகழ்ச்சித் திட்டத்தைப் பூர்த்தி செய்ததன் பின்னர், பெண்கள் சமாதானம் மற்றும் பாதுகாப்பு நிதிக்கு மீள விண்ணப்பிப்பதற்கு இவ்வமைப்புகள் தகுதி பெறும்.

உள்வாங்கும் சேவைகள் : மக்கள் அனைவரும் தமக்கு அங்கீகாரம் கிடைப்பதாகவும், அவர்கள் அச்சமூகங்களின் ஒரு பகுதி என்றும் உணரும் ஒரு சூழலை உருவாக்குதல். அது உறவு, அனுபவம் சார்ந்தது.

1. சமாதானத்துக்கான பயணப்பாதைகள் பற்றிய அறிமுகம்.

சமாதானத்துக்கான பயணப்பாதைகள்: உள்வாங்கும் ஆட்சி மற்றும் சமூக ஒத்திசைவைக் கட்டியெழுப்பல் என்பது இலங்கையில் சமயம், இனம் மற்றும் மொழிக் குழுக்ககளிலும் அவற்றுக்கு மத்தியிலும் - குறிப்பாக, பெண்கள் மற்றும் பெண்பிள்ளைகளுக்கிடையிலும் மத்தியிலும் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் பலப்படுத்துவதனை இலக்காகக் கொண்ட ஐந்தாண்டுத் (2024 – 2029) திட்டமொன்றாகும்.

ஐக்கிய நாடுகளின் பெண்கள் சமாதான மற்றும் பாதுகாப்பு நிகழ்ச்சி நிரலிற்கு இணங்கிச் செல்கின்ற வகையில், மோதல், பலவீனம் மற்றும் பாதுகாப்பின்மை என்பவற்றுக்குப் பதிலிறுப்பதற்கு பெண்கள் மற்றும் பெண்கள் உரிமைகள்சார் அமைப்புகள் என்பவற்றின் தலைமைத்துவத்தையும் பங்குபற்றுதலையும் முன்னேற்றுவதே பெண்கள் சமாதானம் மற்றும் பாதுகாப்பு நிதியின் நோக்கமாகும்.

பெண்கள் உரிமைகள்சார் அமைப்புகள் மற்றும் சிவில் சமூகத்தினருக்கு ஆதரவளிப்பதற்கு மேலதிகமாக, பின்வருவனவற்றுக்காக பொது நிருவாகம் மற்றும் மகளிர் விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சுக்கள், தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகம் மற்றும் ஐந்து மாகாணங்களின் ஏழு மாவட்டங்களில் அமைந்துள்ள பிராந்திய நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற இச்செயற்திட்டம் திட்டமிடுகிறது:

01. அனைவரையும் உள்வாங்குதல், சமத்துவமான மற்றும் பொறுப்புக்கூறக்கூடிய பொது சேவைகள்

02. மொழி உரிமைகள், பால்நிலைசார் பதிலிறுப்பு சேவைகள் மற்றும் சமூகக் கூட்டிணைவு ஆகிய பரப்புகளில் இலங்கையின் பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு (WPS) தேசிய செயல் திட்டத்தை (NAP) அமுல்படுத்தல்.

உள்வாங்கும் சேவைகள்

மக்கள் அனைவரும் தமக்கு அங்கீகாரம் கிடைப்பதாகவும், அவர்கள் அச்சமூகங்களின் ஒரு பகுதி என்றும் உணரும் ஒரு சூழலை உருவாக்குதல். அது உறவு, அனுபவம் சார்ந்தது.

சமத்துவமிக்க சேவைகள்

பொறுப்புக்கூறக்கூடிய சேவைகள்: அரசாங்கம் அதன் நடவடிக்கைகளுக்கு பொறுப்புக்கூறுவது அதன் கடப்பாடு போன்று அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டுமென எதிர்பார்ப்பது மக்களின் உரிமையாகும். உதாரணமாக, தகவலறியும் உரிமை> முறைப்பாட்டுப் பொறிமுறைகள் மற்றும் குடிமக்கள் சாசனம் என்பனவற்றைக் குறிப்பிடலாம்.

பொறுப்புக்கூறலுடன் கூடிய சேவைகள்

அரசாங்கம் அதன் நடவடிக்கைகளுக்கு பொறுப்புக்கூறுவது அதன் கடப்பாடு போன்று அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டுமென எதிர்பார்ப்பது மக்களின் உரிமையாகும். உதாரணமாக, தகவலறியும் உரிமை> முறைப்பாட்டுப் பொறிமுறைகள் மற்றும் குடிமக்கள் சாசனம் என்பனவற்றைக் குறிப்பிடலாம்.

பெண்கள் சமாதானம் மற்றும் பாதுகாப்பு நிதி (WPSF) தொடர்பாக எண்ணக்கரு குறிப்புக்களுக்கான அழைப்பு இவ்வருடம் நவம்பர் மாதத்தில் தொடங்கி வைக்கப்படும். இது பிரத்தியேகமாக, பெண்கள் உரிமைகள் சார்ந்த அமைப்புக்களுக்கானது (WROs).

பெண்கள் உரிமைகள் அமைப்புக்கள் (WROs): பெண்களின் உரிமைகள், பால்நிலை சமத்துவம், பெண்கள் மற்றும் அல்லது பெண்பிள்ளைகளுக்கு எதிரான வன்முறைகளை அல்லது பாலியல் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறையை இல்லாதொழித்தல் WROs இன் பிரதான செயற்பாடுகளாகும். நிறுவனத்தின் பணிக்கூற்று மற்றும் தொலைநோக்கில் பால்நிலை சமத்துவம், பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளை வலுவூட்டுதல் ஆகியவற்றுக்கான அர்ப்பணிப்பு பிரதிபலிக்க வேண்டும்.

2. உள்வாங்கலுக்கான எதிர்கால நிதிக்கு விண்ணப்பிப்பதற்குத் தகுதியுடைய அமைப்புகள்

WordPress Table

3. கூட்டிணைவு மற்றும் கூட்டுவலையமைப்பு

பெண்களின் உரிமைகள்சார் அமைப்புகளானவை, ஏனைய அத்தகைய பெண்களின் உரிமைகள்சார் அமைப்புகள், பெண்களின் கிராமிய அபிவிருத்திச் சங்கங்கள் மற்றும்/ அல்லது சகவாழ்வுச் சங்கங்கள்[4] என்பவற்றுடன் பங்காண்மையுடன் பணியாற்ற முடியும். பெண்கள் கிராமிய அபிவிருத்திச் சங்கங்கள் மற்றும் சகவாழ்வுச் சங்கங்கள் என்பவற்றுக்குத் தமது தலையீடுகளினூடாக ஆதரவு அல்லது பங்காண்மை வழங்குவதற்குத் தெரிவு செய்கின்றபோது, பின்வரும் விடயங்களைக் கருத்திற் கொள்வதற்கு பெண்களின் உரிமைசார் அமைப்புகள் ஊக்குவிக்கப்படுகின்றன:

சமாதானத்துக்கான பயணப்பாதைகள் இலக்காகக் கொண்டுள்ள புவியியல் அமைவிடங்களில் ஒன்றில் அமைந்திருத்தல்.

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அமைப்புகள் ஒன்றாக விண்ணப்பிக்கின்றபட்சத்தில், தலைமைப் பங்காளர் மாத்திரம் மேலே பிரிவு 2இல் விபரிக்கப்பட்ட தகுதிகாண் விதிமுறைகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதன்வழி, ஒப்பந்தமானது, தலைமைப் பங்காளருடன் மேற்கொள்ளப்படுவதுடன், அதுவே பெறப்படும் நிதிகளுக்கான பொறுப்புக் கூறல் அமைப்பாகவிருக்கும். ஏனைய பங்காளர்களுடன் தலைமைப் பங்காளர் ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டப்படுவதுடன், சமாதானத்துக்கான பயணப்பாதைகளுக்கு அதன் பிரதியொன்றை சமர்ப்பிக்க வேண்டும்.

சகவாழ்வு மன்றங்கள் CES என்பது தன்னார்வ மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனங்களாகும். இவை தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் (ONUR) கீழ் நிர்வகிக்கப்படுகின்றன. இன, மத மற்றும் மொழிக் குழுக்களுக்கு மத்தியில் உள்வாங்கல், தேசிய ஒத்திசைவு மற்றும் சகவாழ்விற்கு ஆதரவளிப்பதும் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதும் அதன் பணிப்பாணையாகும்.

4. முறைமை மதிப்பீட்டுக் கவன ஈர்ப்பு (Due Diligence) குறித்த செயன்முறை

பெண்கள் உரிமைகள்சார் அமைப்புகள் பெண்கள் சமாதானம் மற்றும் பாதுகாப்பு நிதியின் கீழ் நிதியளிக்கப்படுவதற்கு பாதுகாப்புப் பரிசோதனைகள் உள்ளடங்கலாக சரியான நடைமுறைக்கான கவனம் குறித்த செயன்முறையினை வெற்றிகரமான பூர்த்தி செய்ய வேண்டியது ஒரு முன்நிபந்தனையாகும்.

விண்ணப்பதாரிகள் தமது செயற்திட்டக் குறிப்புடன் பின்வரும் துணை ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு வேண்டப்படுவார்கள்:

மேற்குறிப்பிட்ட சகல ஏனைய சரியான நடைமுறைக்கான தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளபட்சத்தில், பாதுகாத்தற் கொள்கையொன்று நடைமுறையில் இல்லாத பெண்கள்சார் உரிமைகள் அமைப்பிற்கு அத்தகைய கொள்கையொன்றை விருத்தி செய்வதற்கான ஆற்றலைக் கட்டியெழுப்புவதற்காக சமாதானத்துக்கான பயணப்பாதைகள் ஆதரவளிக்கும்.

பெண்கள்சார் உரிமை அமைப்புகள் நிறுவனமயப்படுத்தப்பட்ட நிதியியல் மற்றும் உள்ளகக் கட்டுப்பாட்டுக் கொள்கையொன்று இல்லாதபட்சத்தில், சமாதானத்துக்கான பயணப்பாதைகளினால் வழங்கப்படும் ஆற்றலைக் கட்டியெழுப்பும் நிகழ்ச்சித் திட்டத்தில் இணைந்து இந்தக் கொள்கைகளை விருத்தி செய்வதற்கான ஆதரவினைப் பெற்றுக் கொள்ள அழைக்கப்படுகிறார்கள். இதன்மூலம் பெண்கள் சமாதான மற்றும் பாதுகாப்பு நிதிக்கு மீள விண்ணப்பிப்பதற்குத் தகுதியுடையோராகின்றனர்.

கீழ்காணும் தகைமைகளைக் கொண்டிருக்கும் 15 பெண்கள் உரிமைசார் அமைப்புக்கள் மட்டுமே ஆற்றல் விருத்திக்கான நிகழ்ச்சித்திட்டத்தில் உள்வாங்கப்படும். 

5. பிரதேச கவனக்குவிப்பு

செயற்திட்டத்தினால் இலக்கு வைக்கப்பட்ட மாவட்டங்களில் தமது தலைமைக் காரியாலயங்களைக் கொண்டுள்ள பெண்கள் உரிமைகள்சார் அமைப்புகளுக்கு முன்னுரிமையளிக்கப்படும். தேசிய மட்ட அல்லது மாகாண மட்ட பெண்கள்சார் உரிமை அமைப்புகள் செயற்திட்டத்தினால் இலக்கு வைக்கப்பட்ட புவியியல் அமைவிடங்களில் பணியாற்ற வேண்டியது கட்டாயமானதுடன், அவ்வாறு செயற்படுவதற்கான தமது இயலுமையையும் வெளிப்படுத்த வேண்டும்.

பின்வரும் இலக்கு வைக்கப்பட்ட நிறுவங்களினால் சேவை வழங்கப்படும் சமூகங்களில் பணியாற்றும் செயற்திட்டங்களுக்கு முன்னுரிமையளிக்கப்படும்.

WordPress Table

6. எதிர்பார்க்கப்படும் பெறுபேறுகள்

முன்மொழியப்படும் அனைத்து செயற்திட்டங்களும் கீழ்க் குறிப்பிடப்பட்டுள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மையப் பகுதிகளுடன் இணங்கிச் செல்கின்ற வகையில் வடிவமைக்கப்பட வேண்டும். ஒரு செயற்திட்டம் ஒன்றுக்கும் மேற்பட்ட மையப் பகுதிகளை உள்ளடக்கியிருப்பதன் காரணமாக அதன் செயற்திட்டக் குறிப்புகள் உயர் புள்ளிகளைப் பெற்றுக் கொள்ளாது. இதன் விளைவைப் பொறுத்தவரை, அகலத்தைவிட ஆழமே ஊக்குவிக்கப்படும்.

WordPress Table

7. செயற்திட்டக் காலம் மற்றும் வரவு செலவுத் திட்டம்

முன்மொழியப்படும் செயற்றிட்டத்தின் சிக்கல்தன்மை, பரப்பெல்லை மற்றும் தாக்கம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட முயற்சிகளுக்கு சமாதானத்திற்கான பயணப்பாதையானது, 10,000,000 இலங்கை ரூபாய்கள் வரையில் நிதியளிக்கும். இத்தகைய பாதீட்டைக் கொண்ட முன்னைய செயற்திட்டங்களின் உதாரணங்கள் உள்ளடங்கலாக இந்த அளவு மட்டத்தில் செயற்திட்டமொன்றை நடத்துவதற்கான வி;ண்ணப்பதாரியின் இயலளவு நிரூபிக்கப்பட வேண்டும். விண்ணப்பதாரிகள் 12 மாதம், 24 மாதம் அல்லது 36 மாதம் கொண்ட செயற்றிட்டங்களை அமுல்படுத்துவதற்கான தெரிவுகள் காணப்படும்.

பெண்கள் சமாதான மற்றும் பாதுகாப்பு நிதியத்தினால் நிதியளிக்கப்படும் செயற்திட்டங்களில் பின்வரும் செலவினங்கள் உள்ளடக்கப்பட முடியாது என்பதைக் கருத்திற் கொள்க:

8. எண்ணக்கருக் குறிப்புகளுக்கான மதிப்பீட்டு விதிமுறைகளும் பூரண முன்மொழிவுகளுக்கான அழைப்பும்

WordPress Table

10.நேர அட்டவணை

WordPress Table

எண்ணக்கரு குறிப்புகள் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், தமது விண்ணப்பத்தின் நிலை குறித்து விசாரிப்பதற்காக சமாதானத்துக்கான பயணப்பாதை செயற்திட்டத்தினைத் தொடர்பு கொள்வதிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு விண்ணப்பதாரிகள் கோரப்படுகின்றனர்.

எவ்வாறு விண்ணப்பிப்பது?

தகுதியைக் கண்டறிதல் படிவம்