பெண்கள் சமாதானம் மற்றும் பாதுகாப்பு நிதி

பெண்கள் சமாதானம் மற்றும் பாதுகாப்பு நிதியின் நோக்கம் யாதெனில் லங்கையின் முதலாவது பெண்கள் சமாதானம் மற்றும் பாதுகாப்பு தேசிய செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான ஆதரவினை வழங்கும் அதேவேளை ஐக்கிய நாடுகளின் பெண்கள் சமாதானம் மற்றும் பாதுகாப்பு நிகழ்ச்சி நிரலிற்கு இணங்கிச் செல்கின்ற வகையில் மோதல் பலவீனம் மற்றும் பாதுகாப்பின்மை என்பவற்றை கையாளும் வகையில் பெண்கள் மற்றும் பெண்கள் உரிமைகள்சார் அமைப்புகள் என்பவற்றின் தலைமைத்துவத்தையும் பங்குபற்றுதலையும் முன்னேற்றுவதாகும்.

பெண்கள் சமாதானம் மற்றும் பாதுகாப்பு நிதிக்கு எண்ணக்கருக் குறிப்புக்களைக் கோருதல்
2024 மேலதிக விபரங்களுக்கு கீழுள்ள டெப் இன் மீது கிளிக் பண்ணுங்கள்.

மூடப்பட்டுள்ளது

Related News

சிறுவர் அபிவிருத்தி நிதியம் (CDF)

திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச செயலகம் மற்றும் பொது வைத்தியசாலை ஆகியவற்றில் அனைவரையும் உள்வாங்கும் வகையிலான அரச சேவைகளை வழங்கல், மேம்படுத்தல் மற்றும் அதற்கான நியாயப்பிரச்சாரம் செய்தல்.

செயற்திட்டங்களைப் பார்க்கவும்

கிராம அபிவிருத்தி நிறுவனம் (RDF)

இலங்கையில் ஒதுக்கப்பட்ட சனசமூகங்களை அமைதி, மீளிணக்கம் மற்றும் உள்வாங்கலுக்கான பொதுச்சேவைகளை அணுகுதல் என்பனவற்றில் வலுவூட்டுதல்.

செயற்திட்டங்களைப் பார்க்கவும்

அபிவிருத்திக்கான சமூக அமைப்புக்களின் வலையமைப்பு

யாழ் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட சனசமூகங்கள் மற்றும் சேவை வழங்குநர் மத்தியில் உள்வாங்கும் ஆட்சி மற்றும் சமூக ஒத்திசைவை வலுப்படுத்தல்.

செயற்திட்டங்களைப் பார்க்கவும்

கிராம பெண்கள் முன்னணி

பெண்கள் ஆராய்ச்சி மையம் (CENWOR) 

பெண்கள் மத்தியஸ்தானம் இலங்கை

டாபிந்து கூட்டமைப்பு   

பெண்கள் ஒத்துழைப்பு 
முன்னணி 

பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் 

கிழக்கு சமூக அபிவிருத்தி 
மையம் 

விழுது - ஆற்றல் மேம்பாட்டு மையம்

விழுது - ஆற்றல் மேம்பாட்டு மையம்

இலங்கை உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளனம் (FSLGA)

எதிர்பார்க்கப்படும் பெறுபேறுகள்

பெண்கள் சட்ட மற்றும் கொள்கைச் சீர்திருத்தங்கள் மூலமாகப் பால்நிலை அடிப்படையிலான வன்முறை மற்றும் பாகுபாடுகளுக்கு எதிரான மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பைக் கொண்டிருப்பார்கள்

கள மட்டத்தில் உள்ள பெண்கள் பால்நிலை உணர்திறன் கொண்ட அரச ஆதரவு வளங்கள் மற்றும் சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்தியுள்ளனர்

மோதலால் பாதிக்கப்பட்டு இடப்பெயர்விற்கு ஆளான பெண்களுக்கு பால்நிலை உணர்திறனுள்ள, அரசால் வழங்கப்படுகின்ற உளநல-சமூக சேவைகள் மற்றும் நிலையான தீர்வுகள் கிடைத்தல்

பெண்கள் பால்நிலை உணர்திறன் மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட அனர்த்த முகாமைத்துவப் பொறிமுறைகளுக்கு மேம்படுத்தப்பட்ட அணுகலைக் கொண்டிருப்பார்கள்

இராணுவக் கணவனை இழந்த பெண்கள் முன்னாள் பெண் போராளிகள் மற்றும் பெண்கள் தலைமைத் தாங்கும் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகின்ற பால்நிலை உணர்திறன் கொண்ட அரச சேவைகளுக்கான அணுகல் அதிகரித்துள்ளது

பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க குறிப்பாக வயதான பெண்கள் சிறுமிகள் இயலாமைகளை உடைய பெண்கள் மற்றும் மாற்றுப் பாலினப் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கவும் அவர்களின் சமூக-பொருளாதார வாய்ப்புகளையும் தீர்மானமெடுப்பதில் பங்கேற்பதை மேம்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன

இலங்கையில் கள மட்டத்திலுள்ள பெண்களைப் பாதிக்கும் நுண்நிதி நடைமுறைகள் தொடர்பான தலையீடுகள் பால்நிலையைக் கருதுவதாகவும் பிரதானப்படுத்துவதாகவும் பின்பற்றப்படுகின்றன

சமாதானத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் மோதல்-தடுப்பு மற்றும் மோதல் தீர்வு ஆகியவற்றில் பெண்களின் சமமான ஈடுபாடு மற்றும் ஆளுகை மற்றும் அரசியலின் தீர்மானமெடுக்கும் மட்டங்களில் பெண்களின் ஈடுபாட்டின்மூலம் இலங்கைச் சமூகத்தின் ஜனநாயக விழுமியங்களை மேம்படுத்துதல்

இலங்கையில் பன்முகத்தன்மை மற்றும் அரச சேவையில் அனைவரையும் உள்வாங்குதல், அரச சேவை வழங்கலில் புத்தாக்கம் மற்றும் அனைவரையும் உள்வாங்குதல் ஆகிய செயன்முறைகள் தொடர்பாக காலத்திற்கேற்ற, மிகவும் துல்லியமான தரவுகள் மற்றும் தகவல்களால் அறிவு செழுமைப்படுத்தப்பட்டிருத்தல்.

எதிர்பார்க்கப்படும் பெறுபேறுகள்

பெண்கள் சட்ட மற்றும் கொள்கைச் சீர்திருத்தங்கள் மூலமாகப் பால்நிலை அடிப்படையிலான வன்முறை மற்றும் பாகுபாடுகளுக்கு எதிரான மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பைக் கொண்டிருப்பார்கள்

கள மட்டத்தில் உள்ள பெண்கள் பால்நிலை உணர்திறன் கொண்ட அரச ஆதரவு வளங்கள் மற்றும் சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்தியுள்ளனர்

மோதலால் பாதிக்கப்பட்டு இடப்பெயர்விற்கு ஆளான பெண்களுக்கு பால்நிலை உணர்திறனுள்ள, அரசால் வழங்கப்படுகின்ற உளநல-சமூக சேவைகள் மற்றும் நிலையான தீர்வுகள் கிடைத்தல்

பெண்கள் பால்நிலை உணர்திறன் மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட அனர்த்த முகாமைத்துவப் பொறிமுறைகளுக்கு மேம்படுத்தப்பட்ட அணுகலைக் கொண்டிருப்பார்கள்

இராணுவக் கணவனை இழந்த பெண்கள் முன்னாள் பெண் போராளிகள் மற்றும் பெண்கள் தலைமைத் தாங்கும் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகின்ற பால்நிலை உணர்திறன் கொண்ட அரச சேவைகளுக்கான அணுகல் அதிகரித்துள்ளது

பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க குறிப்பாக வயதான பெண்கள் சிறுமிகள் இயலாமைகளை உடைய பெண்கள் மற்றும் மாற்றுப் பாலினப் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கவும் அவர்களின் சமூக-பொருளாதார வாய்ப்புகளையும் தீர்மானமெடுப்பதில் பங்கேற்பதை மேம்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன

இலங்கையில் கள மட்டத்திலுள்ள பெண்களைப் பாதிக்கும் நுண்நிதி நடைமுறைகள் தொடர்பான தலையீடுகள் பால்நிலையைக் கருதுவதாகவும் பிரதானப்படுத்துவதாகவும் பின்பற்றப்படுகின்றன

சமாதானத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் மோதல்-தடுப்பு மற்றும் மோதல் தீர்வு ஆகியவற்றில் பெண்களின் சமமான ஈடுபாடு மற்றும் ஆளுகை மற்றும் அரசியலின் தீர்மானமெடுக்கும் மட்டங்களில் பெண்களின் ஈடுபாட்டின்மூலம் இலங்கைச் சமூகத்தின் ஜனநாயக விழுமியங்களை மேம்படுத்துதல்

சமுதாயத்தில் தீர்மானமெடுப்பதில் அனைத்து மட்ட ஆளுகைகளிலும் பெண்களின் சமமான மற்றும் அதிகரித்த ஈடுபாடு

பெண்கள் சமாதானம் மற்றும் பாதுகாப்பு நிதி (WPSF) செயற்திட்டங்கள்

விழுது - ஆற்றல் மேம்பாட்டு மையம்

WPS (பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு)ல் பெண்களின் பங்களிப்பு மற்றும் உள்வாங்குதலை உயர்த்தும், பெண்களுடைய ஈடுபாட்டினை அதிகரிப்பதற்கான ஆக்கபூர்வமான செயன்முறைகளை வலுப்படுத்துதல் ( EMPOWER நிகழ்ச்சித்திட்டம்) 

செயற்திட்டங்களைப் பார்க்கவும்

பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் 

சமூக நிலைமாற்றம்: பால்நிலை அடிப்படையிலான பாலியல் வன்முறைக்கு பதிவலிருத்தி நிலையான அபிவிருத்திக்கான மகளிர் குரலை மேலோங்கச் செய்தல் 

செயற்திட்டங்களைப் பார்க்கவும்

டாபிந்து கூட்டமைப்பு    

வவுனியாவில் பெண்களை வலுப்படுத்துதல்: பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் உட்பட பெண் தொழிற்சாலைத் தொழிலாளர்களுக்கான ஆதரவு, சேவைகளுக்கான அணுகல் மற்றும் பணியிட உரிமைகளை வலுப்படுத்துதல்.

செயற்திட்டங்களைப் பார்க்கவும்

1. சமாதானத்துக்கான பயணப்பாதைகள் பற்றிய அறிமுகம்.

சமாதானத்துக்கான பயணப்பாதைகள்: உள்வாங்கும் ஆட்சி மற்றும் சமூக ஒத்திசைவைக் கட்டியெழுப்பல் என்பது இலங்கையில் சமயம், இனம் மற்றும் மொழிக் குழுக்ககளிலும் அவற்றுக்கு மத்தியிலும் - குறிப்பாக, பெண்கள் மற்றும் பெண்பிள்ளைகளுக்கிடையிலும் மத்தியிலும் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் பலப்படுத்துவதனை இலக்காகக் கொண்ட ஐந்தாண்டுத் (2024 – 2029) திட்டமொன்றாகும்.

பெண்கள், பெண் பிள்ளைகள், LGBTQI+ நபர்கள் (ஓரினபாலீர்ப்பு பெண்கள், ஓரினபாலீர்ப்பு ஆண்கள், இருபால் உறவாளர்கள், மாற்றுப் பாலினத்தவர்கள், பால்புதுமையர்கள், இடையிலிறுத்தவர்கள், ஏனையோர்) ஆகியோருக்கு விஷேடமான கவனக் குவிப்புடன் பெண்கள், பெண் பிள்ளைகள், LGBTQI+ நபர்கள், இனம், மதம் மற்றும் மொழி ரீதியான சிறுபான்மையினர், இயலாமையுடையவர்கள் ஆகிய சகலரையும் உள்வாங்கும், சமத்துவமான மற்றும் பொறுப்புக்கூறத்தக்க பொதுச் சேவைகளை கோரும் விதத்தில் சிவில் சமூகக் குழுக்கள் மற்றும் தனிப்பட்ட நபர்களை வலுவூட்டுவதே IFF நிதியின் நோக்கமாகும்.

மேலும், சமாதானத்துக்கான பயணப்பாதைகள் செயற்திட்டம் சிவில் சமூக அமைப்புக்களுக்குத் தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குவதோடு, பொது நிருவாகம் மற்றும் மகளிர் விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சுக்கள், தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகம் மற்றும் ஐந்து மாகாணங்களின் ஏழு மாவட்டங்களில் அமைந்துள்ள பிராந்திய நிறுவனங்களுடன் இணைந்து செயற்பட்டு;

01. அனைவரையும் உள்வாங்குதல், சமத்துவமான மற்றும் பொறுப்புக்கூறக்கூடிய பொது சேவைகள்

02. மொழி உரிமைகள், பால்நிலைசார் பதிலிறுப்பு சேவைகள் மற்றும் சமூகக் கூட்டிணைவு ஆகிய பரப்புகளில் இலங்கையின் பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு (WPS) தேசிய செயல் திட்டத்தை (NAP) அமுல்படுத்தல்.

உள்வாங்கும் சேவைகள்

மக்கள் அனைவரும் தமக்கு அங்கீகாரம் கிடைப்பதாகவும், அவர்கள் அச்சமூகங்களின் ஒரு பகுதி என்றும் உணரும் ஒரு சூழலை உருவாக்குதல். அது உறவு, அனுபவம் சார்ந்தது.

சமத்துவமிக்க சேவைகள்

தடைகள் மற்றும் சிறப்புரிமைகள் இருப்பதென்பது மக்கள் அனைவருக்கும் சமமான வளங்கள் கிடைப்பதில்லை என்பதாகும். எனவே, எந்தவொரு நபரையும் ஒதுக்காத நடைமுறைகள் மற்றும் செயன்முறைகளை மேம்படுத்துவதன் மூலம் ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்வதையே சமத்துவமிக்க சேவைகள் இலக்காகக்கொண்டுள்ளது.

பொறுப்புக்கூறலுடன் கூடிய சேவைகள்

அரசாங்கம் அதன் நடவடிக்கைகளுக்கு பொறுப்புக்கூறுவது அதன் கடப்பாடு போன்று அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டுமென எதிர்பார்ப்பது மக்களின் உரிமையாகும். உதாரணமாக, தகவலறியும் உரிமை> முறைப்பாட்டுப் பொறிமுறைகள் மற்றும் குடிமக்கள் சாசனம் என்பனவற்றைக் குறிப்பிடலாம்.

பெண்கள் சமாதானம் மற்றும் பாதுகாப்பு நிதி (WPSF) தொடர்பாக எண்ணக்கரு குறிப்புக்களுக்கான அழைப்பு இவ்வருடம் நவம்பர் மாதத்தில் தொடங்கி வைக்கப்படும். இது பிரத்தியேகமாக, பெண்கள் உரிமைகள் சார்ந்த அமைப்புக்களுக்கானது (WROs).

பெண்கள் உரிமைகள் அமைப்புக்கள் (WROs): பெண்களின் உரிமைகள், பால்நிலை சமத்துவம், பெண்கள் மற்றும் அல்லது பெண்பிள்ளைகளுக்கு எதிரான வன்முறைகளை அல்லது பாலியல் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறையை இல்லாதொழித்தல் WROs இன் பிரதான செயற்பாடுகளாகும். நிறுவனத்தின் பணிக்கூற்று மற்றும் தொலைநோக்கில் பால்நிலை சமத்துவம், பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளை வலுவூட்டுதல் ஆகியவற்றுக்கான அர்ப்பணிப்பு பிரதிபலிக்க வேண்டும்.

2. IFF நிதிக்கு விண்ணப்பிப்பதற்கு தகுதிபெறும் நிறுவனங்கள்.

WordPress Table

3. கூட்டிணைவு மற்றும் கூட்டுவலையமைப்பு

சிவில் சமூக அமைப்புக்களானவை (CSOs) ஏனைய சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும்/ அல்லது சகவாழ்வு மன்றங்களுடன் (CES) இணைந்து செயற்பட முடியும். அவ்வாறு, சிவில் சமூக அமைப்புக்கள் தமது தலையீடுகளுடன் நடைமுறைப்படுத்தும் செயற்திட்டங்களுக்குத் தேவையான ஒத்துழைப்புக்களைப் பெற்றுக்கொள்ளவோ அல்லது இணைந்து செயலாற்றவோ சகவாழ்வு மன்றங்களைத் தெரிவுசெய்யும் போது கீழே குறிப்பிட்டுள்ள பிரமாணங்களை கருத்திற்கொள்வது அவசியம் :

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அமைப்புகள் ஒன்றாக விண்ணப்பிக்கின்றபட்சத்தில், தலைமைப் பங்காளர் மாத்திரம் மேலே பிரிவு 2இல் விபரிக்கப்பட்ட தகுதிகாண் விதிமுறைகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதன்வழி, ஒப்பந்தமானது, தலைமைப் பங்காளருடன் மேற்கொள்ளப்படுவதுடன், அதுவே பெறப்படும் நிதிகளுக்கான பொறுப்புக் கூறல் அமைப்பாகவிருக்கும். ஏனைய பங்காளர்களுடன் தலைமைப் பங்காளர் ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டப்படுவதுடன், சமாதானத்துக்கான பயணப்பாதைகளுக்கு அதன் பிரதியொன்றை சமர்ப்பிக்க வேண்டும்.

சகவாழ்வு மன்றங்கள் CES என்பது தன்னார்வ மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனங்களாகும். இவை தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் (ONUR) கீழ் நிர்வகிக்கப்படுகின்றன. இன, மத மற்றும் மொழிக் குழுக்களுக்கு மத்தியில் உள்வாங்கல், தேசிய ஒத்திசைவு மற்றும் சகவாழ்விற்கு ஆதரவளிப்பதும் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதும் அதன் பணிப்பாணையாகும்.

4. முறைமை மதிப்பீட்டுக் கவன ஈர்ப்பு (Due Diligence) குறித்த செயன்முறை

IFF நிதியின் கீழ் நிதியளிப்பதற்கு சிவில் சமூக அமைப்புக்களானவை பாதுகாத்தல் பரிசீலனைகள் உள்ளடங்கலாக முறையான மதிப்பீட்டுச் செயன்முறையை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்திருப்பது முன்நிபந்தனையாகும்.

விண்ணப்பதாரிகள் தமது செயற்திட்டக் குறிப்புடன் பின்வரும் துணை ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு வேண்டப்படுவார்கள்:

ஏனைய அனைத்து மதிப்பீட்டுச் செயன்முறைகளைப் பூர்த்திசெய்திருந்தாலும், பாதுகாப்புக் கொள்கை நடைமுறையில் இல்லாத சிவில் சமூக அமைப்புக்களுக்கு அத்தகையதொரு பாதுகாப்புக் கொள்கையை விருத்திசெய்வதற்கான திறனைக் கட்டியெழுப்பிக்கொள்வதற்கான வாய்ப்புக்களை சமாதானத்துக்கான பயணப்பாதைகள் செயற்திட்டம் தயார்செய்துகொடுக்கும்.

5. பிரதேச கவனக்குவிப்பு

செயற்திட்டத்தினால் இலக்கு வைக்கப்பட்ட மாவட்டங்களில் தமது தலைமைக் காரியாலயங்களைக் கொண்டுள்ள பெண்கள் உரிமைகள்சார் அமைப்புகளுக்கு முன்னுரிமையளிக்கப்படும். தேசிய மட்ட அல்லது மாகாண மட்ட பெண்கள்சார் உரிமை அமைப்புகள் செயற்திட்டத்தினால் இலக்கு வைக்கப்பட்ட புவியியல் அமைவிடங்களில் பணியாற்ற வேண்டியது கட்டாயமானதுடன், அவ்வாறு செயற்படுவதற்கான தமது இயலுமையையும் வெளிப்படுத்த வேண்டும்.

பின்வரும் இலக்கு வைக்கப்பட்ட நிறுவங்களினால் சேவை வழங்கப்படும் சமூகங்களில் பணியாற்றும் செயற்திட்டங்களுக்கு முன்னுரிமையளிக்கப்படும்.

WordPress Table

6. எதிர்பார்க்கப்படும் பெறுபேறுகள்

கீழே குறிப்பிட்டுள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பெறுபேறுகளை இலக்காகக்கொண்டு எண்ணக்கரு முன்மொழிவுகள் தயார்செய்யப்பட வேண்டும். ஒரு செயற்திட்டம் ஒன்றுக்கு மேற்பட்ட பெறுபேறுகளில் கவனம் செலுத்துவதால் மாத்திரம் குறித்த செயற்திட்டத்தின் எண்ணக்கரு குறிப்புக்களுக்கு அதிக மதிப்பெண்கள் கிடைக்குமென எதிர்பார்க்க முடியாது. ஒரு செயற்திட்டத்தின் விளைவுகளை கவனத்திற்கொள்ளும் போது அதன் அகலத்தை விட ஆழத்திலேயே அதிக கவனம் செலுத்தப்படும்.

WordPress Table

7. செயற்திட்டக் காலம் மற்றும் வரவு செலவுத் திட்டம்

முன்மொழியப்படும் செயற்றிட்டத்தின் சிக்கல்தன்மை, பரப்பெல்லை மற்றும் தாக்கம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட முயற்சிகளுக்கு சமாதானத்திற்கான பயணப்பாதையானது, 10,000,000 இலங்கை ரூபாய்கள் வரையில் நிதியளிக்கும். இத்தகைய பாதீட்டைக் கொண்ட முன்னைய செயற்திட்டங்களின் உதாரணங்கள் உள்ளடங்கலாக இந்த அளவு மட்டத்தில் செயற்திட்டமொன்றை நடத்துவதற்கான வி;ண்ணப்பதாரியின் இயலளவு நிரூபிக்கப்பட வேண்டும். விண்ணப்பதாரிகள் 12 மாதம், 24 மாதம் அல்லது 36 மாதம் கொண்ட செயற்றிட்டங்களை அமுல்படுத்துவதற்கான தெரிவுகள் காணப்படும்.

IFF நிதியால் நிதியளிக்கப்படுகின்ற செயற்றிட்டங்களில் கீழே குறிப்பிட்டுள்ள செலவுகளை உள்ளடக்க முடியாதென்பதை தயவுடன் கவனத்திற்கொள்ளவும்.

8. எண்ணக்கருக் குறிப்புகளுக்கான மதிப்பீட்டு விதிமுறைகளும் பூரண முன்மொழிவுகளுக்கான அழைப்பும்

WordPress Table

10.நேர அட்டவணை

WordPress Table

எவ்வாறு விண்ணப்பிப்பது?

தகுதியைக் கண்டறிதல் படிவம்